Tamil Lyrics
அறிவொன் றறநின் றறிவார் அறிவிற்
பிறிவொன் றறநின்ற பிரான லையோ?
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென் றவரோ டுறும்வே லவனே!
Tamil Lyrics (Split)
அறிவு ஒன்றுஅற நின்று அறிவார் அறிவில்
பிறிவு ஒன்றுஅற நின்ற பிரான் அலையோ
செறிவு ஒன்றுஅற வந்து இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே!
Tamil Meaning
ஜீவபோதம் கடந்த நிலையில் நின்று சிவபோதத்தால் தேவரீரை அறியும் ஞானியரின் ஞானநிலையில், பிரிவு ஒன்றும் இல்லாது நிற்கும் திருமுருகப்பெருமான் அன்றோ தேவரீர்! உலக பந்தமான நெருங்கிய உறவுகள் அற்றுப் போகும் நிலையை எய்துவதால் அறியாமை என்னும் இருள் சிதைவுற்று அழியுமாறு மனக்கலக்கம் என்னும் மயக்கத்தை, வென்ற ஞானியர்களோடு பொருந்தும் வேலாயுதக் கடவுளே!
English Lyrics
aRivu ondRu aRa nindRu aRivAr aRivil
piRivu ondRu aRa nindRa pirAn alaiyO
seRivu ondRu aRa vandhu iruLE sidhaiya
veRi vendRavarOdu uRum vElavanE!
English Meaning
O, God Thirumrukapperumaan! You are abiding in the form of spiritual wisdom without parting from the sages, who know You through Siva-consciousness beyond the consciousness of the soul! You are the God of lance, and You are abiding with the sages, who have conquered the mental illusion, so that the dark ignorance is destroyed when the close worldly relationships come to an end!
