புய வகுப்பு
முன்னுரை
முருகவேளின் பன்னிரு திருக்கரங்களின் செயல்களை எடுத்துக் கூறுகின்றது. இந்த வகுப்புக்கு வித்து ரூரூ சந்தாரம் சாத்தும் புய இயல் கந்தா என்றேத்தும் படியென சந்தாபம் தீர்த்தென் றடியிணை தருவாயே க்ஷ்க்ஷ் - எனத் திருப்புகழில் முன்னர் வேண்டின வேண்டுகோளே. வேண்டுவார் வேண்டுவதே ஈந்தருள்பவன் இறைவன். அருமையாய் அமைந்து பொருள் செறிந்துள்ள வகுப்பு இது. ரூரூ முற்றிய பனிருதோளும்.... வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என்னும் கட்டளைக்கு இணங்கியது. இவ் வகுப்பைப் பாராயணத்திற் கொள்வதால் ரூரூ முன்பு செய்த பழிக்குத் துணை அவன் பன்னிருதோளும்என்னும் மறைமொழிப்படி (கந்தரலங்காரம் 70) பழவினைதொலையும் என்பது தெளிவு. இவ் வகுப்பானது முதல் பன்னிரண்டு அடிகளில் திருமுருகாற்றுப்படையை அப்படியே தழுவிப், பின்னர் முருகன் திருப்புயத்தின் பிற சிறப்புக்களை எடுத்துக் கூறுகின்றது. பிற சிறப்புக்களை எடுத்துக் கூறுகின்றது.
புய வகுப்பு (மூலம்)
தனதன தனன தனதன தனன தனாதன
தான தான தனதன தத்தன
தந்த தந்த தந்த தானத் தனந்தன
வசைதவிர் ககன சரசிவ கரண மகாவ்ருத
சீல சால வரமுநி சித்தரை
அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித் துநின்றன
மணிவட மழலை உடைமணி தபனிய நாணழ
காக நாடி வகைவகை கட்டும
ருங்கு டன்பொ ருந்து ரீதிக் கிசைந்தன
வருணித கிரண வருணித வெகுதரு ணாதப
சோதி யாடை வடிவுபெ றப்புனை
திண்செ ழுங்கு றங்கின் மேல்வைத் தசைந்தன
வளைகடல் உலகை வலம்வரு பவுரி வினோதக
லாப கோப மயில்வத னத்துவி
ளங்கும் அங்கு சங்க டாவிச் சிறந்தன
வரைபக நிருதர் முடிபக மகர மகோததி
தீயின் வாயின் மறுகவி திர்த்தயில்
வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன
மதியென உதய ரவியென வளைபடு தோல்வி
சால நீல மலிபரி சைப்படை
கொண்டு நின்று ழன்று சாதிக்க முந்தின
மனகுண சலன மலினமில் தூியஅ தீதசு
காநு பூதி மவுனநி ரக்ஷர
மந்தி ரம்பொ ருந்தி மார்பிற் றிகழ்ந்தன
வகைவகை குழுமி மொகுமொகு மொகென அநேகச
மூக ராக மதுபம்வி ழச்சிறு
சண்ப கஞ்செ றிந்த தாரிற் பொலிந்தன
மிசைமிசை கறுவி வெளிமுக டளவு நிசாசர
சேனை தேடி விததிபெ றச்சில
கங்க ணங்க றங்க மீதிற் சுழன்றன
வெருவுவ வெருவ எரிசொரி விழியுள பூதபி
சாசு போத மிகுதொனி பற்றிமு
ழங்கு விஞ்சு கண்டை வாசிக் கைகொண்டன
விதமிகு பரத சுரவனி தையர்கண மேல்தொறும்
லீலை யாக விமலச லத்தினை
விண்டி றந்து மொண்டு வீசிப் பொலிந்தன
விதரண தருவின் மலரிடை செருகிய கூதள
நீப மாலை விபுதர்கு லக்குலி
சன்ப யந்த செங்கை யானைக் கிசைந்தன
விகசித தமர பரிபுர முளரி தொழா அபி
ராம வேடர் விமலைதி னைப்புன
மங்கை கொங்கை கண்டு வேளைப் புகுந்தன
விதிர்தரு சமர முறிகர கமல நகாயுத
கோழி வீற விதரண சித்ரஅ
லங்க்ரு தம்பு னைந்து பூரித் திலங்கின
விரகுடை எனது மனதுடன் அகில்பனி நீர்புழு
கோட ளாவி ம்ருகமத கற்புர
குங்கு மங்க லந்து பூசித் துதைந்தன
வினைபுரி பவனி தொழுதழு துருகிய கோதையர்
தூது போக விடுமது பக்ஷண
வண்டி னந்தி ரண்டு சூழப் படிந்தன
இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளித
னாசி தேசி பயிரவி குச்சரி
பஞ்சு ரந்தெ ரிந்து வீணைக் கிசைந்தன
இறுதியில் உதய ரவிகண நிகரென ஆறிரு
காது தோயும் இலகும ணிக்கன
விம்ப குண்ட லங்கள் மேவிப் புரண்டன
எதிர்படு நெடிய தருஅடு பெரிய கடாம்உமிழ்
நாக மேகம் இடிபட மற்பொரு
திண்சி லம்ப டங்க மோதிப் பிடுங்கின
எழுதரும் அழகு நிறமலி திறல்இசை யாகஉ
தார தீரம் என உரை பெற்றஅ
டங்க லுஞ்சி றந்து சாலத் ததும்பின
இருள்பொரு கிரண இரணிய வடகுல பாரிய
மேரு சாதி இனமென ஒத்துல
கங்கள் எங்க ணும்ப்ர காசித்து நின்றன
இயன்முநி பரவ ஒருவிசை அருவரை யூடதி
பார கோர இவுளிமு கத்தவள்
கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன
இபரத துரக நிசிசரர் கெடஒரு சூரனை
மார்பு பீறி அவனுதி ரப்புனல்
செங்க ளந்து ளங்கி ஆடிச் சிவந்தன
எவையெவை கருதில் அவையவை தருகொடை
யால்மணி மேக ராசி சுரபிய வற்றொடு
சங்க கஞ்ச பஞ்ச சாலத்தை வென்றன
அசைவற நினையும் அவர்பவம் அகலவெ மேல்வரு
கால தூதரை யுடையும் அப்படி
அங்கும் இங்கும் எங்கும் ஓடத் துரந்தன
அகிலமும் எனது செயலல திலையென யானென
வீறு கூறி அறவுமி குத்தெழும்
ஐம்பு லன்தி யங்கி வீழத் திமிர்ந்தன
அனலெழு துவசம் உடுகுலம் உதிரவி யோமமும்
ஏழு பாரும் அசலமும் மிக்கபி
லங்க ளுங்கு லுங்க ஆலித் ததிர்ந்தன
அடல்நெடு நிருதர் தளமது மடிய வலாரிதன்
வானை ஆள அரசுகொ டுத்தப
யம்பு குந்த அண்ட ரூரைப் புரந்தன
அடவியில் விளவு தளவலர் துளவு குராமகிழ்
கோடல் பாடல் அளிமுரல் செச்சைய
லங்கல் செங்க டம்பு நேசித் தணிந்தன
அரியதொர் தமிழ்கொ டுரிமையொ டடிதொழு தேகவி
மாலை யாக அடிமைதொ டுத்திடு
புன்சொல் ஒன்று நிந்தி யாமற் புனைந்தன
அழகிய குமரன் உமைதிரு மதலை பகீரதி
மாதர் வாழும் அறுவர் ப்ரியப்படு
கந்தன் எந்தை யிந்த்ர நீலச் சிலம்பினன்
அநுபவன் அநகன் அனனியன் அமலன் அமோகன்அ
நேகன் ஏகன் அபினவன் நித்தியன்
அஞ்ச லென்ப்ரசண்ட வாகைப் புயங்களே.
புயவகுப்பு(பதம் பிரித்தது)
வசை தவிர் ககன சர சிவ கரண மகா வ்ருத
சீல சால வர(ம்) முநி சித்தரை
அச்சல் அச்சல் என்று வாழ்வித்து நின்றன
மணிவட(ம்)மழலை உடைமணி தபனிய நாண்
அழகாக நாடி வகை வகை கட்டு
மருங்குடன் பொருந்து ரீதிக்கு இசைந்தன
வருணித கிரண(ம்) அருணித வெகு தருண ஆதப
சோதி ஆடை வடிவு பெறப்புனை
திண் செழும் குறங்கின் மேல் வைத்து அசைந்தன
வளை கடல் உலகை வலம் வரு(ம்) பவுரி வினோத
கலாப கோப மயில் வதனத்து
விளங்கும் அங்குசம் கடாவிச் சிறந்தன
வரை பக நிருதர் முடி பகமகர(ம்) மகோததி
தீயின் வாயின் மறுக விதிர்த்து அயில்
வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன
மதியென உதய ரவி என வளைபடு தோல்
விசால நீலமலி பரிசைப் படை
கொண்டு நின்று உழன்று சாதிக்க முந்தின
மன குண சலனம் மலினம் இல் துரிய அதீத
சுக அனுபூதி மவுன நிரக்ஷர
மந்திரம் பொருந்தி மார்பில் திகழ்ந்தன
வகை வகை குழுமி மொகு மொகு மொகு என அநேக
சமூக ராக மதுபம் விழச் சிறு
சண்பகம் செறிந்த தாரில் பொலிந்தன
மிசை மிசை கறுவி வெளி முகடு அளவு நிசாசர
சேனை தேடி விததி பெறச் சில
கங்கணம் கறங்க மீதில் சுழன்றன
வெருவுவ வெருவஎரி சொரி விழி உள பூத
பிசாசு போத மிகு தொனி பற்றி
முழங்கு விச்சு கண்டை வாசிக்கை கொண்டன
விதமிகு பரத சுர வனிதையர் கணம் மேல் தொறும்
லீலையாக விமல சலத்தினை
விண் திறந்து மொண்டு வீசிப் பொலிந்தன
விதரண தருவின் மலரிடை செருகிய கூதள
நீபமாலை விபுதர் குலக் குலிசன்
பயந்த செங்கை யானைக்கு இசைந்தன
விகசித தமர(ம்) பரிபுர(ம்) முளரி தொழா
அபிராம வேடர் விமலை தினைப் புன
மங்கை கொங்கை கண்டு வேளைப் புகுந்தன
விதிர் தருசமர(ம்) முறிகர கமல(ம்) நகாயுத(ம்)
கோழி வீற விதரண சித்ர
அலங்க்ருதம் புனைந்து பூரித்து இலங்கின
விரகுடை எனது மனதுடன் அகில் பனிநீர்
புழுகோடு அளாவிம்ருகமத கற்புர
குங்குமம் கலந்து பூசித்து உதைந்தன
வினைபுரி பவனி தொழுது அழுது உருகிய கோதையர்
தூது போக விடும் மது பக்ஷண
வண்டினம் திரண்டு சூழப் படிந்தன
இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளி
தனாசி தேசி பயிரவி குச்சரி
பச்சுரம் தெரிந்து வீணைக்கு இசைந்தன
இறுதியில் உதயரவி கணம் நிகர் என ஆறிருடுஇறுதியில் உதயரவி கணம் நிகர் என ஆறிரு
காது தோயும் இலகு மணிக்கனடு
விம்ப(ம்) குண்டலங்கள்டுமேவிப் புரண்டன
எதிர்படு(ம்)நெடிய தரு அடு பெரிய கடாம் உமிழ்டு
நாக மேகம் இடிபட மற்பொருடு
திண் சிலம்பு அடங்கடுமோதிப் பிடுங்கின
எழுத அரும் அழகு நிறம் மலி திறல் இசையாகடு
உதார தீரம் என உரைபெற்றடு
அடங்கலும் சிறந்துடுசாலத் ததும்பின
இருள் பொரு கிரண(ம்) இரணிய வடகுல பாரியடு
மேரு சாதி இனமென ஒத்துடு
உலகங்கள் எங்கணும்டுப்ரகாசித்து நின்றன
இயல் முநி பரவ ஒருவிசை அருவரையூ
அதிபார கோர இவுளி முகத்தவள்டு
கொங்கை கொண்ட சண்டடுமார்பைப் பிளந்தன
இப(ம்)ரத(ம்)துரக(ம்) நிசிசரர் கெட ஒரு சூரனைடு
மார்பு பீறி அவன் உதிரப் புனல்டு
செங்களம் துளங்கிடுஆடிச் சிவந்தன
எவை எவை கருதில் அவை அவைடுதரு கொடையால்
மணி மேக ராசி சுரபி அவற்றொ
சங்க(ம்) கச்ச(ம்) பச்சடுசாலத்தை வென்றன
அசைவு அற நினையும் அவர் பவம் அகலவெ மேல்வருடு
கால தூதரை உடையும் அப்படிடு
அங்கும் இங்கும் எங்கும்டுஓடத் துரந்தன
அகிலமும் எனது செயல் அலது இலை என யான் எனடு
வீறு கூறி அறவு மிகுத்து எழும்டு
ஐம்புலன் தியங்கிடுவீழத் திமிர்ந்தன
அனல் எழு துவசம் உடுகுலம் உதிர வியோமமும்டு
ஏழு பாரும் அசலமும் மிக்கடு
பிலங்களும் குலுங்கடுஆலித்து அதிர்ந்தன
அடல் நெடு நிருதர் தளம் அது மடிய வலாரி தன்
வானை ஆள அரசு கொடுத்து
அபயம் புகுந்த அண்டர் ஊரைப் புரந்தன
அடவியில் விளவு தளவலர் துளவு குரா மகிழ்
கோடல் பாடல் அளி முரல் செச்சை
அலங்கல் செங்கடம்பு நேசித்து அணிந்தன
அரியதொர் தமிழ் கொடு உரிமையொடு அடிதொழுதே
கவி மாலையாக அடிமை தொடுத்து இடு
புன்சொல் ஒன்று நிந்தியாமல் புனைந்தன
அழகிய குமரன் உமை திரு மதலை பகீரதி
மாதர் வாழும் அறுவர் ப்ரியப்படு
கந்தன் எந்தை இந்த்ர நீலச் சிலம்பினன்
அநுபவன் அநகன் அனனியன் அமலன் அமோகன்
அநேகன் ஏகன் அபினவன் நித்தியன்
அச்சல் என் ப்ரசண்ட வாகைப் புயங்களே.
பதவுரை
குற்றம், பழிச் சொல் ஆகியவற்றை அறவே நீக்கியவர்களும், விண்ணில் சஞ்சரிப்பவர்களும் ஆன, சிவ தியானம் நிறைந்த, சிறந்த ஒழுக்கம் வாய்ந்த புண்ணிய ஆத்மாக்களும், அளவற்ற வரங்களைப் பெற்றவர்களும் ஆன, தவசிகளான சித்த புருசர்களை பயப்படாதீர்கள், அச்சம் வேண்டாம் என அடைக்கலம் கொடுத்து, அவர்களுக்கு சிரஞ்சீவி வாழ்வு கொடுத்து துணையாக நின்றன - (முருகனின் வாகைப் புயங்களே).
ரத்ன சரம் மெல்லிய ஓசை எழுப்பும் இடுப்பில் கட்டிய மணி மாலையும் (மொழி புகலும் உடை மணியும்) பொன்னொளி வீசும் அரை ஞாண் இவைகளை மிகவும் விரும்பி வித விதமாகக் கட்டியுள்ள இடுப்பில் சேரும் முறைக்கு ஒத்ததாக விளங்கின - (முருகனின் வாகைப் புயங்களே).
விவரித்துச் சொல்லத் தக்க ஒளி வீசும் சிவந்த நிறம் மிக்க உதய சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட உடையை அழகுடன் அணிந்துள்ள வலிமையான செழிப்பான தொடையின் மேல் வைக்கப்பட்டு அசைந்தன - (முருகனின் வாகைப் புயங்களே).
சமுத்திரத்தால் சூழப்பட்ட பூமியை வலமாக சுற்றி சுற்றி மண்டலமிட்டு வந்த அதிசயச் செயலைக் கொண்டதும் தோகை மிகுத்துள்ளதும் ஆன உக்ரமான மயிலின் முகத்தில் ஒளி வீசும் யானைத் தோட்டியை செலுத்தி மேன்மையாக விளங்கின - (முருகனின் வாகைப் புயங்களே).
க்ரவுஞ்சம், எழு கிரிகள் பிளவு பட, அசுரர்களின் முடிகள் சிதறுண்டு விழ, மகர மீன்கள் நிறைந்துள்ள பெரும் கடல் நெருப்பிடையே கலங்க, அசைத்து கூர்மையும் வெற்றியும் நிலைபெற்றுள்ள பரிசுத்தமான வேலாயுதத்தை அலங்காரமாக ஏந்தி நின்றன - (முருகனின் வாகைப் புயங்களே).
சந்திரன் போலவும் இளம் சூரியன் போலவும் வட்ட வடிவமுடன் ஒளி வீசுவதாய் தோலால் செய்யப்பட்டு அகன்றுள்ளதாய் கருமை நிறத்துடன்
உள்ள கேடயம் எனும் ஆயுதத்தை ஏந்தி நின்று சுழற்றி சுழற்றி வெற்றியை அடைய முற்பட்டு விளங்கின - (முருகனின் வாகைப் புயங்களே).
மனத்தின் ஓட்டம் குணம் மாறி மாறி இருப்பது, ஒரு நிலை இல்லாமல் ஓடுவது போன்ற மாசு அற்றதாய் யோகியர்கள் தன்மயமாக நிற்கும் நான்காவது நிலைக்கும் மேற்பட்ட துரியாதீதமாகிய, - எனதும் யானும் வேறாகி எவரும் யாரும் யானாகும் நிலை - துன்பம் கலப்பு இல்லாத இன்பத்தை அனுபவிக்கும் ஞான மயமான மவுன மந்திரம், மனம், வாக்கு, காயம், தொழில்கள் அற்றுப் போக செய்யும் மந்திரம் (உரை மாள செயல் மாண்டு சித்தம் அவிழ), பொருந்தி மார்பில் சின் முத்திரையுடன் விளங்கின -(முருகனின் வாகைப் புயங்களே).
கூட்டம் கூட்டமாகத் திரண்டு மொகு மொகு என்ற ஒலியுடன் பலவிதமான இசையுடன் வண்டுகள் விருப்பத்துடன் மேலே வந்து விழ மல்லிகைப் பூ நெருக்கமாகக் கட்டப்பட்ட மாலை மீது விளங்கின - (முருகனின் வாகைப் புயங்களே).
மேன்மேலும் சிறந்து அண்ட உச்சி வரை அசுரர் சேனைகளின் இருப்பிடங்களைக் கண்டு பிடித்து அவர்கள் பரவி இருந்த இடங்கள் அனைத்தையும் சிதறி அடிக்க தோள் வளை, கை காப்பு முதலியன கணீர் என ஒலி எழுப்ப மேலே சுழன்றன - (முருகனின் வாகைப் புயங்களே).
மற்றவர்கள் பயந்து ஒதுங்கும் துஷ்ட மிருகங்களும் பயப்படும்படியும் தீயைக் கக்குகின்ற கண்கள் உள்ள பேய்களும் பிசாசுகளும் ஓடிப் போகும்படி பலத்த சத்தத்துடன் ஒலி மிகுத்துள்ள கண்டா மணியை வாசிக்க முற்பட்டன - (முருகனின் வாகைப் புயங்களே).
பலவகையான பரதக் கலையில் வல்லுரான தேவ ஸ்திரிகள் கூட்டத்தில் ஒவ்வொருவர் மேலும் (அவர் ஆடும் போது) விளையாட்டாக தூய ஆகாச கங்கையின் ¤லத்தை ஆகாயத்திலிருந்து வருவதற்கு வழி திறந்து அந்நீரை அள்ளி அம் மாதர்கள் மேல் தெளித்து விளங்கின - (முருகனின் வாகைப் புயங்களே).
கொடைக்கு பேர் போன கற்பக மரத்தின் மலர்கள் நடு நடுவில் வைத்து கோர்க்கப்பட்ட கூதள கடப்ப மாலைகளை தேவ வம்சத்தினரான வஜ்ரப்படை ஏந்திய இந்திரன் வளர்த்த சிவந்த கையை உடைய தேவயானைக்கு சூட்டுவதற்கு உடன் பட்டன - (முருகனின் வாகைப் புயங்களே).
மலர்ந்துள்ளதும் ஒலி செய்கின்றதுமாகிய பாதச் சலங்கைகள் அணிந்துள்ள தாமரையன்ன திருவடிகளை வணங்கி அந்த அழகு நிறைந்த வேடப் பெண், பரிசுத்த, தினைக் கொல்லையில் வசித்து வந்த வள்ளியின் மார்பைப் பார்ப்பதற்காக (அதாவது அவளின் பக்குவ நிலையை அறிய) தக்க சமயம் பார்த்து அணைந்தன - (முருகனின் வாகைப் புயங்களே).
நடுங்கச் செய்யும் போரில் எதிரிகளை அடக்கி அழிக்க வல்ல தனது தாமரையன்ன கையில் கால் நகங்களையே ஆயுதமாக கொண்டு சண்டை போடும் (காலாயுதக் கொடியோன்) சேவல் கொடி மேம்பட்டு விளங்க (சேவலங் கொடியான பைங்கர) கொடையில் சிறந்த அழகிய அலங்காரம் உடையதானதை தரித்துக் கொண்டு கம்பீரமாக நின்றன - (முருகனின் வாகைப் புயங்களே).
கபடம் மிக்க எனது மனதை தன் வசமாக்கி அகில் பன்னீர் புனுகுச் சட்டம் இவைகளுடன் என் மனதையும் கலந்து கஸ்தூரி பச்சைக் கற்பூரம் குங்குமப் பூ சேர்ந்த இந்தக் கலவையை பூசிக் கொண்டு பிரகாசித்தன - (முருகனின் வாகைப் புயங்களே).
தன்னைக் காணும் பெண்களின் உள்ளத்தில் விரக போரை உண்டாக்கும் உலாக் காட்சியைக் கண்டு வணங்கி அழுது மனம் நொந்த மாதர்கள் உன்னிடம் காதல் தூதாக அனுப்பிய தேன் உண்ணும் வண்டுகள் கூட்டமாகச் சேர்ந்து மொய்த்திருந்தன - (முருகனின் வாகைப் புயங்களே).
இராகங்களில் இனிமையான கைசிகை முதலிய ராகங்களின் இலக்கணத்தை அறிந்து கொண்டு அவற்றை வீணையில் அமைத்து மீட்டுவன (முருகனின் வாகைப் புயங்களே).
எல்லையற்ற ஒளி வீசும் உதய சூரியனுக்கு ஒப்பான 12 காதுகளில் நிலை பெற்று விளங்கும் ரத்ன பொன் மயமான பிரகாசிக்கும் குண்டலங்கள் பொருந்தப் பெற்று விளங்கின - (முருகனின் வாகைப் புயங்களே).
எதிரே தென்படும் நீண்ட மரங்களை அழிப்பனவாய் அபரிவிதமான மத நீரை வெளிப்படுத்துகின்ற அஷ்ட திக்கு யானைகள் இடி மேகங்கள் போல் ஒன்றோடு ஒன்று மோதி பேரொலி செய்ய மற்போர் செய்வித்து வலிமையான அஷ்ட கிரிகளையும் தாக்கி பிடுங்கி எறிய வல்லன - (முருகனின் வாகைப் புயங்களே).
சித்தரித்துக் கூற அரிதான அழகும் ஒளியும் மேம்பட்ட வீரச் செயல்களும் பிறரால் புகழப்பட்டு இலக தயாள குணம் வீரம் என்று பேசப்பட்ட அனைத்து நற்பண்புகளுக்கு இடம் என மேலோங்கி விளங்கின - (முருகனின் வாகைப் புயங்களே).
இருளை விலக்குவதும் ஒளி வீசுவதும் பொன் மயமானதும் வட திசையில் விளங்குவதும் சேஷ்டமானதும் பருத்ததுமாகிய மேரு மலைக் கூட்டங்களின் ºஜாதி போல் திகழ்ந்து இளைத்துஉலகெங்கிலும் ஒளி வீசி நின்றன - (முருகனின் வாகைப் புயங்களே).
முத்தமிழில் சிறந்த தேர்ச்சி பெற்ற நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடி துதித்த போது முன்பு திருப்பரங்குன்றத்தில் பெரிய மலைக் குகையில் மிகப் பெரிய பயங்கரமான குதிரை முகம் கொண்ட கற்கிமுகி எனும் பூதத்தின் பெரிய தனங்களை உடைய மார்பைப் பிளந்து அழித்தன - (முருகனின் வாகைப் புயங்களே).
யானைப்படை, ரதப்படை, குதிரைப்படை கொண்ட அரக்கர்கள் அழிந்து போகவும், ஒப்பற்ற சூரபத்மனின் மார்பைப் பிளந்து அவனது இரத்த வெள்ளத்தால் சிவந்திருந்த போர் பூமி கலங்கும்படி பரவச் செய்து கோபித்தன - (முருகனின் வாகைப் புயங்களே).
அடியார்கள் என்ன என்ன விரும்பினாலும் அவைகள் அனைத்தையும் வருவித்து தரும் வள்ளல் தன்மையில் (அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே), சிந்தாமணி, மேகக் கூட்டங்கள், காமதேனு இவைகளுடன் சங்க நிதி, பதும நிதி இரண்டையும் தெய்வ தருக்களான கற்பகம் முதலிய ஐந்து கூட்டத்தையும் ÿ¤யித்து விளங்கின - (முருகனின் வாகைப் புயங்களே).
சலனமின்றி ஏக சித்த தியானம் செய்பவர்களின் (எழுதிய படமென இருளறு சுடரடி இணைதொழு மௌனிகள்) பிறவித் துன்பம் நீங்க அவர்களைப் பிடிக்கவரும் எம தூதர்கள் சிதறி ஓடும்படி பல திசைகளிலும் அவர்களைத் துரத்தி வெற்றி கண்டன - (முருகனின் வாகைப் புயங்களே).
அனைத்தும் எனது சொந்த முயற்சியே தவிர வேறு எவருடைய உதவியும் கிடையாது என்று பெருமை பேசி நான் நான் எனும் இறுமாப்புடன் மேலே கிளம்பி மிகவும் துள்ளுகின்ற பஞ்சேந்திரியங்கள் சோர்ந்து ஒடுங்கும்படி அவற்றின் மேலே விழுந்து அடிப்பன - (முருகனின் வாகைப் புயங்களே).
பெரும் சினத்துடன் வரும் கொடிய சேவல், நட்சத்திரக் கூட்டங்கள் சிதறி விழும்படி ஆகாய வெளியும் ஏழு உலகங்களும் மலைகளும் பெரிய பாதாள லோகங்களும் அதிரும்படி பெரும் கூக்குரல் செய்து ஆரவாரித்தன. இப்படிப்பட்ட சேவல் கொடியை ஏந்தி இருப்பன - (முருகனின் வாகைப் புயங்களே).
வலிமை மிக்க அசுரர்களின் சேனைகள் இறந்து ஒழிய, இந்திரன் தனது விண்ணுலகை ஆள, அரசாட்சியைத் தந்து தம்மிடம் சரண் அடைந்த தேவர்களின் அமராவதியை காப்பாற்றின - (முருகனின் வாகைப் புயங்களே).
காட்டில் வளருகின்ற விளா இலைகள், முல்லை மலர், துளசி, குராமலர், மகிழ மலர், வெண் காந்தள், பாதிரிப் பூ, வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற வெட்சி மாலை, சிவந்த கடப்ப மாலை, முதலியவற்றை விரும்பி சூடிக் கொண்டன - (முருகனின் வாகைப் புயங்களே).
ஒப்பற்ற தமிழில் வழி வழி அடிமை எனும் உரிமையோடு திருப்பாதங்களை வணங்கி பாடல் தொகுதியான இந்த அடியேன் புனைந்த அற்பமான வார்த்தைகளை இகழாமல் ஏற்றுக் கொண்டன - (முருகனின் வாகைப் புயங்களே).
அழகு மிக்கக் குமாரக்கடவுள், பார்வதி தேவியின் செல்வப் புதல்வன், கங்கையும் ஆறு கார்த்திகை மாதர்களும் அன்பு செலுத்தும் கந்தசுவாமி, எனக்கு தந்தையானவன், இந்திரன் வளர்த்த நீலோற்பல பூ மலரும் திருத்தணிகை மலையான்,
ஆன்மாக்களுக்கு இன்ப துன்ப உணர்வை நுகரச் செய்பவன், பாவம் அற்றவன், ˝வாத்மாவை விட்டு வேறுபடாத பரமாத்மா, மலம் நீங்கிய தூயவன், இச்சையற்றவன், பல பொருளாக காட்சி தருபவன், ஒரே நித்தியப் பொருளானவன், புதியவன், அழிவற்றவன் - ஆகிய முருகப்பெருமானின் ரூரூ பயப்படாதே க்ஷ்க்ஷ் எனக் குறிப்பு காட்டும் வெற்றி விளங்கும் வீர பன்னிரு புயங்களே... கரங்களே.
பதம் பிரித்து சொல் விளக்கம்
1. வசை தவிர் ககன சர சிவ கரண மகா வ்ருத சீல சால வர(ம்) முநி சித்தரை அச்சல் அச்சல் என்று வாழ்வித்து நின்றன
குற்றம், பழிச் சொல் ஆகியவற்றை அறவே நீக்கியவர்களும், விண்ணில் சஞ்சரிப்பவர்களும் ஆன, சிவ தியானம் நிறைந்த, சிறந்த ஒழுக்கம் வாய்ந்த புண்ணிய ஆத்மாக்களும், அளவற்ற வரங்களைப் பெற்றவர்களும் ஆன, தவசிகளான சித்த புருசர்களை பயப்படாதீர்கள், அச்சம் வேண்டாம் என அடைக்கலம் கொடுத்து, அவர்களுக்கு சிரஞ்சீவி வாழ்வு கொடுத்து துணையாக நின்றன - (முருகனின் வாகைப் புயங்களே).
2. மணிவட(ம்)மழலை உடைமணி தபனிய நாண் அழகாக நாடி வகை வகை கட்டு மருங்குடன் பொருந்து ரீதிக்கு இசைந்தன
ரத்ன சரம் மெல்லிய ஓசை எழுப்பும் இடுப்பில் கட்டிய மணி மாலையும் (மொழி புகலும் உடை மணியும்) பொன்னொளி வீசும் அரை ஞாண் இவைகளை மிகவும் விரும்பி வித விதமாகக் கட்டியுள்ள இடுப்பில் சேரும் முறைக்கு ஒத்ததாக விளங்கின - (முருகனின் வாகைப் புயங்களே).
3. வருணித கிரண(ம்) அருணித வெகு தருண ஆதப சோதி ஆடை வடிவு பெறப்புனை திண் செழும் குறங்கின் மேல் வைத்து அசைந்தன
விவரித்துச் சொல்லத் தக்க ஒளி வீசும் சிவந்த நிறம் மிக்க உதய சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட உடையை அழகுடன் அணிந்துள்ள வலிமையான செழிப்பான தொடையின் மேல் வைக்கப்பட்டு அசைந்தன - (முருகனின் வாகைப் புயங்களே).
4. வளை கடல் உலகை வலம் வரு(ம்) பவுரி வினோத கலாப கோப மயில் வதனத்து விளங்கும் அங்குசம் கடாவிச் சிறந்தன
சமுத்திரத்தால் சூழப்பட்ட பூமியை வலமாக சுற்றி சுற்றி மண்டலமிட்டு வந்த அதிசயச் செயலைக் கொண்டதும் தோகை மிகுத்துள்ளதும் ஆன உக்ரமான மயிலின் முகத்தில் ஒளி வீசும் யானைத் தோட்டியை செலுத்தி மேன்மையாக விளங்கின - (முருகனின் வாகைப் புயங்களே).
5. வரை பக நிருதர் முடி பகமகர(ம்) மகோததி தீயின் வாயின் மறுக விதிர்த்து அயில் வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன
க்ரவுஞ்சம், எழு கிரிகள் பிளவு பட, அசுரர்களின் முடிகள் சிதறுண்டு விழ, மகர மீன்கள் நிறைந்துள்ள பெரும் கடல் நெருப்பிடையே கலங்க, அசைத்து கூர்மையும் வெற்றியும் நிலைபெற்றுள்ள பரிசுத்தமான வேலாயுதத்தை அலங்காரமாக ஏந்தி நின்றன - (முருகனின் வாகைப் புயங்களே).
6. மதியென உதய ரவி என வளைபடு தோல் விசால நீலமலி பரிசைப் படை கொண்டு நின்று உழன்று சாதிக்க முந்தின
சந்திரன் போலவும் இளம் சூரியன் போலவும் வட்ட வடிவமுடன் ஒளி வீசுவதாய் தோலால் செய்யப்பட்டு அகன்றுள்ளதாய் கருமை நிறத்துடன்
உள்ள கேடயம் எனும் ஆயுதத்தை ஏந்தி நின்று சுழற்றி சுழற்றி வெற்றியை அடைய முற்பட்டு விளங்கின - (முருகனின் வாகைப் புயங்களே).
7. மன குண சலனம் மலினம் இல் துரிய அதீத சுக அனுபூதி மவுன நிரக்ஷர மந்திரம் பொருந்தி மார்பில் திகழ்ந்தன
மனத்தின் ஓட்டம் குணம் மாறி மாறி இருப்பது, ஒரு நிலை இல்லாமல் ஓடுவது போன்ற மாசு அற்றதாய் யோகியர்கள் தன்மயமாக நிற்கும் நான்காவது நிலைக்கும் மேற்பட்ட துரியாதீதமாகிய, - எனதும் யானும் வேறாகி எவரும் யாரும் யானாகும் நிலை - துன்பம் கலப்பு இல்லாத இன்பத்தை அனுபவிக்கும் ஞான மயமான மவுன மந்திரம், மனம், வாக்கு, காயம், தொழில்கள் அற்றுப் போக செய்யும் மந்திரம் (உரை மாள செயல் மாண்டு சித்தம் அவிழ), பொருந்தி மார்பில் சின் முத்திரையுடன் விளங்கின -(முருகனின் வாகைப் புயங்களே).
8. வகை வகை குழுமி மொகு மொகு மொகு என அநேக சமூக ராக மதுபம் விழச் சிறு சண்பகம் செறிந்த தாரில் பொலிந்தன
கூட்டம் கூட்டமாகத் திரண்டு மொகு மொகு என்ற ஒலியுடன் பலவிதமான இசையுடன் வண்டுகள் விருப்பத்துடன் மேலே வந்து விழ மல்லிகைப் பூ நெருக்கமாகக் கட்டப்பட்ட மாலை மீது விளங்கின - (முருகனின் வாகைப் புயங்களே).
9. மிசை மிசை கறுவி வெளி முகடு அளவு நிசாசர சேனை தேடி விததி பெறச் சில கங்கணம் கறங்க மீதில் சுழன்றன
மேன்மேலும் சிறந்து அண்ட உச்சி வரை அசுரர் சேனைகளின் இருப்பிடங்களைக் கண்டு பிடித்து அவர்கள் பரவி இருந்த இடங்கள் அனைத்தையும் சிதறி அடிக்க தோள் வளை, கை காப்பு முதலியன கணீர் என ஒலி எழுப்ப மேலே சுழன்றன - (முருகனின் வாகைப் புயங்களே).
10. வெருவுவ வெருவஎரி சொரி விழி உள பூத
பிசாசு போத மிகு தொனி பற்றி முழங்கு விச்சு கண்டை வாசிக்கை கொண்டன
மற்றவர்கள் பயந்து ஒதுங்கும் துஷ்ட மிருகங்களும் பயப்படும்படியும் தீயைக் கக்குகின்ற கண்கள் உள்ள பேய்களும் பிசாசுகளும் ஓடிப் போகும்படி பலத்த சத்தத்துடன் ஒலி மிகுத்துள்ள கண்டா மணியை வாசிக்க முற்பட்டன - (முருகனின் வாகைப் புயங்களே).
11. விதமிகு பரத சுர வனிதையர் கணம் மேல் தொறும் லீலையாக விமல சலத்தினை விண் திறந்து மொண்டு வீசிப் பொலிந்தன
பலவகையான பரதக் கலையில் வல்லுரான தேவ ஸ்திரிகள் கூட்டத்தில் ஒவ்வொருவர் மேலும் (அவர் ஆடும் போது) விளையாட்டாக தூய ஆகாச கங்கையின் ¤லத்தை ஆகாயத்திலிருந்து வருவதற்கு வழி திறந்து அந்நீரை அள்ளி அம் மாதர்கள் மேல் தெளித்து விளங்கின - (முருகனின் வாகைப் புயங்களே).
12. விதரண தருவின் மலரிடை செருகிய கூதள நீபமாலை விபுதர் குலக் குலிசன்
பயந்த செங்கை யானைக்கு இசைந்தன
கொடைக்கு பேர் போன கற்பக மரத்தின் மலர்கள் நடு நடுவில் வைத்து கோர்க்கப்பட்ட கூதள கடப்ப மாலைகளை தேவ வம்சத்தினரான வஜ்ரப்படை ஏந்திய இந்திரன் வளர்த்த சிவந்த கையை உடைய தேவயானைக்கு சூட்டுவதற்கு உடன் பட்டன - (முருகனின் வாகைப் புயங்களே).
13. விகசித தமர(ம்) பரிபுர(ம்) முளரி தொழா அபிராம வேடர் விமலை தினைப் புன மங்கை கொங்கை கண்டு வேளைப் புகுந்தன
மலர்ந்துள்ளதும் ஒலி செய்கின்றதுமாகிய பாதச் சலங்கைகள் அணிந்துள்ள தாமரையன்ன திருவடிகளை வணங்கி அந்த அழகு நிறைந்த வேடப் பெண், பரிசுத்த, தினைக் கொல்லையில் வசித்து வந்த வள்ளியின் மார்பைப் பார்ப்பதற்காக (அதாவது அவளின் பக்குவ நிலையை அறிய) தக்க சமயம் பார்த்து அணைந்தன - (முருகனின் வாகைப் புயங்களே).
14. விதிர் தருசமர(ம்) முறிகர கமல(ம்) நகாயுத(ம்) கோழி வீற விதரண சித்ர
அலங்க்ருதம் புனைந்து பூரித்து இலங்கின
நடுங்கச் செய்யும் போரில் எதிரிகளை அடக்கி அழிக்க வல்ல தனது தாமரையன்ன கையில் கால் நகங்களையே ஆயுதமாக கொண்டு சண்டை போடும் (காலாயுதக் கொடியோன்) சேவல் கொடி மேம்பட்டு விளங்க (சேவலங் கொடியான பைங்கர) கொடையில் சிறந்த அழகிய அலங்காரம் உடையதானதை தரித்துக் கொண்டு கம்பீரமாக நின்றன - (முருகனின் வாகைப் புயங்களே).
15. விரகுடை எனது மனதுடன் அகில் பனிநீர் புழுகோடு அளாவிம்ருகமத கற்புர குங்குமம் கலந்து பூசித்து உதைந்தன
கபடம் மிக்க எனது மனதை தன் வசமாக்கி அகில் பன்னீர் புனுகுச் சட்டம் இவைகளுடன் என் மனதையும் கலந்து கஸ்தூரி பச்சைக் கற்பூரம் குங்குமப் பூ சேர்ந்த இந்தக் கலவையை பூசிக் கொண்டு பிரகாசித்தன - (முருகனின் வாகைப் புயங்களே).
16. வினைபுரி பவனி தொழுது அழுது உருகிய கோதையர் தூது போக விடும் மது பக்ஷண வண்டினம் திரண்டு சூழப் படிந்தன
தன்னைக் காணும் பெண்களின் உள்ளத்தில் விரக போரை உண்டாக்கும் உலாக் காட்சியைக் கண்டு வணங்கி அழுது மனம் நொந்த மாதர்கள் உன்னிடம் காதல் தூதாக அனுப்பிய தேன் உண்ணும் வண்டுகள் கூட்டமாகச் சேர்ந்து மொய்த்திருந்தன - (முருகனின் வாகைப் புயங்களே).
17. இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளி தனாசி தேசி பயிரவி குச்சரி பச்சுரம் தெரிந்து வீணைக்கு இசைந்தன
இராகங்களில் இனிமையான கைசிகை முதலிய ராகங்களின் இலக்கணத்தை அறிந்து கொண்டு அவற்றை வீணையில் அமைத்து மீட்டுவன (முருகனின் வாகைப் புயங்களே).
18. இறுதியில் உதயரவி கணம் நிகர் என ஆறிரு காது தோயும் இலகு மணிக்கன விம்ப(ம்) குண்டலங்கள் மேவிப் புரண்டன
எல்லையற்ற ஒளி வீசும் உதய சூரியனுக்கு ஒப்பான 12 காதுகளில் நிலை பெற்று விளங்கும் ரத்ன பொன் மயமான பிரகாசிக்கும் குண்டலங்கள் பொருந்தப் பெற்று விளங்கின - (முருகனின் வாகைப் புயங்களே).
19. எதிர்படு(ம்)நெடிய தரு அடு பெரிய கடாம் உமிழ் நாகமேகம்இடிபட மற்பொரு திண் சிலம்பு அடங்க மோதிப் பிடுங்கின
எதிரே தென்படும் நீண்ட மரங்களை அழிப்பனவாய் அபரிவிதமான மத நீரை வெளிப்படுத்துகின்ற அஷ்ட திக்கு யானைகள் இடி மேகங்கள் போல் ஒன்றோடு ஒன்று மோதி பேரொலி செய்ய மற்போர் செய்வித்து வலிமையான அஷ்ட கிரிகளையும் தாக்கி பிடுங்கி எறிய வல்லன - (முருகனின் வாகைப் புயங்களே).
20. எழுத அரும் அழகு நிறம் மலி திறல் இசையாக உதார தீரம் என உரைபெற்ற அடங்கலும் சிறந்து சாலத் ததும்பின
சித்தரித்துக் கூற அரிதான அழகும் ஒளியும் மேம்பட்ட வீரச் செயல்களும் பிறரால் புகழப்பட்டு இலக தயாள குணம் வீரம் என்று பேசப்பட்ட அனைத்து நற்பண்புகளுக்கு இடம் என மேலோங்கி விளங்கின - (முருகனின் வாகைப் புயங்களே).
21. இருள் பொரு கிரண(ம்) இரணிய வடகுல பாரிய மேரு சாதி இனமென ஒத்து உலகங்கள் எங்கணும் ப்ரகாசித்து நின்றன
இருளை விலக்குவதும் ஒளி வீசுவதும் பொன் மயமானதும் வட திசையில் விளங்குவதும் சேஷ்டமானதும் பருத்ததுமாகிய மேரு மலைக் கூட்டங்களின் ºஜாதி போல் திகழ்ந்து இளைத்துஉலகெங்கிலும் ஒளி வீசி நின்றன - (முருகனின் வாகைப் புயங்களே).
22. இயல் முநி பரவ ஒருவிசை அருவரையூடு அதிபார கோர இவுளி முகத்தவள் கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன
முத்தமிழில் சிறந்த தேர்ச்சி பெற்ற நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடி துதித்த போது முன்பு திருப்பரங்குன்றத்தில் பெரிய மலைக் குகையில் மிகப் பெரிய பயங்கரமான குதிரை முகம் கொண்ட கற்கிமுகி எனும் பூதத்தின் பெரிய தனங்களை உடைய மார்பைப் பிளந்து அழித்தன - (முருகனின் வாகைப் புயங்களே).
23. இப(ம்)ரத(ம்)துரக(ம்) நிசிசரர் கெட ஒரு சூரனை மார்பு பீறி அவன் உதிரப் புனல் செங்களம் துளங்கி ஆடிச் சிவந்தன
யானைப்படை, ரதப்படை, குதிரைப்படை கொண்ட அரக்கர்கள் அழிந்து போகவும், ஒப்பற்ற சூரபத்மனின் மார்பைப் பிளந்து அவனது இரத்த வெள்ளத்தால் சிவந்திருந்த போர் பூமி கலங்கும்படி பரவச் செய்து கோபித்தன - (முருகனின் வாகைப் புயங்களே).
24. எவை எவை கருதில் அவை அவை தரு கொடையால் மணி மேக ராசி சுரபி அவற்றொடு சங்க(ம்) கச்ச(ம்) பச்ச சாலத்தை வென்றன
அடியார்கள் என்ன என்ன விரும்பினாலும் அவைகள் அனைத்தையும் வருவித்து தரும் வள்ளல் தன்மையில் (அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே), சிந்தாமணி, மேகக் கூட்டங்கள், காமதேனு இவைகளுடன் சங்க நிதி, பதும நிதி இரண்டையும் தெய்வ தருக்களான கற்பகம் முதலிய ஐந்து கூட்டத்தையும் ÿ¤யித்து விளங்கின - (முருகனின் வாகைப் புயங்களே).
25. அசைவு அற நினையும் அவர் பவம் அகலவெ மேல்வரு கால தூதரை உடையும் அப்படி அங்கும் இங்கும் எங்கும் ஓடத் துரந்தன
சலனமின்றி ஏக சித்த தியானம் செய்பவர்களின் (எழுதிய படமென இருளறு சுடரடி இணைதொழு மௌனிகள்) பிறவித் துன்பம் நீங்க அவர்களைப் பிடிக்கவரும் எம தூதர்கள் சிதறி ஓடும்படி பல திசைகளிலும் அவர்களைத் துரத்தி வெற்றி கண்டன - (முருகனின் வாகைப் புயங்களே).
26. அகிலமும் எனது செயல் அலது இலை என யான் என வீறு கூறி அறவு மிகுத்து எழும் ஐம்புலன் தியங்கி வீழத் திமிர்ந்தன
அனைத்தும் எனது சொந்த முயற்சியே தவிர வேறு எவருடைய உதவியும் கிடையாது என்று பெருமை பேசி நான் நான் எனும் இறுமாப்புடன் மேலே கிளம்பி மிகவும் துள்ளுகின்ற பஞ்சேந்திரியங்கள் சோர்ந்து ஒடுங்கும்படி அவற்றின் மேலே விழுந்து அடிப்பன - (முருகனின் வாகைப் புயங்களே).
27. அனல் எழு துவசம் உடுகுலம் உதிர வியோமமும்
ஏழு பாரும் அசலமும் மிக்க
பிலங்களும் குலுங்க ஆலித்து அதிர்ந்தன
பெரும் சினத்துடன் வரும் கொடிய சேவல், நட்சத்திரக் கூட்டங்கள் சிதறி விழும்படி ஆகாய வெளியும் ஏழு உலகங்களும் மலைகளும் பெரிய பாதாள லோகங்களும் அதிரும்படி பெரும் கூக்குரல் செய்து ஆரவாரித்தன. இப்படிப்பட்ட சேவல் கொடியை ஏந்தி இருப்பன - (முருகனின் வாகைப் புயங்களே).
28. அடல் நெடு நிருதர் தளம் அது மடிய வலாரி தன் வானை ஆள அரசு கொடுத்து அபயம் புகுந்த அண்டர் ஊரைப் புரந்தன
வலிமை மிக்க அசுரர்களின் சேனைகள் இறந்து ஒழிய, இந்திரன் தனது விண்ணுலகை ஆள, அரசாட்சியைத் தந்து தம்மிடம் சரண் அடைந்த தேவர்களின் அமராவதியை காப்பாற்றின - (முருகனின் வாகைப் புயங்களே).
29. அடவியில் விளவு தளவலர் துளவு குரா மகிழ் கோடல் பாடல் அளி முரல் செச்சை அலங்கல் செங்கடம்பு நேசித்து அணிந்தன
காட்டில் வளருகின்ற விளா இலைகள், முல்லை மலர், துளசி, குராமலர், மகிழ மலர், வெண் காந்தள், பாதிரிப் பூ, வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற வெட்சி மாலை, சிவந்த கடப்ப மாலை, முதலியவற்றை விரும்பி சூடிக் கொண்டன - (முருகனின் வாகைப் புயங்களே).
30. அரியதொர் தமிழ் கொடு உரிமையொடு அடிதொழுதே கவி மாலையாக அடிமை தொடுத்து இடு புன்சொல் ஒன்று நிந்தியாமல் புனைந்தன
ஒப்பற்ற தமிழில் வழி வழி அடிமை எனும் உரிமையோடு திருப்பாதங்களை வணங்கி பாடல் தொகுதியான இந்த அடியேன் புனைந்த அற்பமான வார்த்தைகளை இகழாமல் ஏற்றுக் கொண்டன - (முருகனின் வாகைப் புயங்களே).
31. அழகிய குமரன் உமை திரு மதலை பகீரதி மாதர் வாழும் அறுவர் ப்ரியப்படு கந்தன் எந்தை இந்த்ர நீலச் சிலம்பினன்
அழகு மிக்கக் குமாரக்கடவுள், பார்வதி தேவியின் செல்வப் புதல்வன், கங்கையும் ஆறு கார்த்திகை மாதர்களும் அன்பு செலுத்தும் கந்தசுவாமி, எனக்கு தந்தையானவன், இந்திரன் வளர்த்த நீலோற்பல பூ மலரும் திருத்தணிகை மலையான்,
32. அநுபவன் அநகன் அனனியன் அமலன் அமோகன் அநேகன் ஏகன் அபினவன் நித்தியன்
அச்சல் என் ப்ரசண்ட வாகைப் புயங்களே.
ஆன்மாக்களுக்கு இன்ப துன்ப உணர்வை நுகரச் செய்பவன், பாவம் அற்றவன், ˝வாத்மாவை விட்டு வேறுபடாத பரமாத்மா, மலம் நீங்கிய தூயவன், இச்சையற்றவன், பல பொருளாக காட்சி தருபவன், ஒரே நித்தியப் பொருளானவன், புதியவன், அழிவற்றவன் - ஆகிய முருகப்பெருமானின் ரூரூ பயப்படாதே க்ஷ்க்ஷ் எனக் குறிப்பு காட்டும் வெற்றி விளங்கும் வீர பன்னிரு புயங்களே ... கரங்களே.