Books
Arunagirichelvar

Kandhar Anubhudhi

Song 46 - enthAyum enakku (எந்தாயும் எனக்கு)

~ 1 min read

Tamil Lyrics

எந்தா யுமெனக் கருள்தந் தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்!
கந்தா! கதிர்வே லவனே! உமையாள்
மைந்தா! குமரா! மறைநா யகனே!

Tamil Lyrics (Split)

எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ!
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனை ஆள்!
கந்தா! கதிர்வேலவனே! உமையாள்
மைந்தா! குமரா! மறைநாயகனே!

Tamil Meaning

கந்தப் பெருமானே! ஒளிவீசும் வேலாயுதத்தை உடையவரே! உமாதேவியின் மைந்தரே! குமார மூர்த்தியே! வேத மூர்த்தியே! தேவரீர் அடியேனின் தாயும், அடியேனுக்கு அருள்புரியும் தந்தையும் ஆவீர்! அடியேனின் மனவருத்தங்கள் யாவற்றையும் நீக்கி அடியேனை ஆண்டருள்வீராக!

English Lyrics

enthAyum enakku aruL thandhaiyum nee!
sindhAkulamAnavai theerththu enai AL
kandhA! kadhirvElavanE! umaiyAL
maindhA! kumarA! maRainAyaganE!

English Meaning

O, Lord Kanthapperumaan! You have the lustrous weapon of lance! You are the beloved Divine Son of Umaathevi! O, Lord Kumaraa! You are the Lord of the Vedas! You are my mother, and father bestowing me grace! Please accept me as Your devotee by removing all the sufferings of my mind!

· WhatsApp
Books

Kandhar Anubhudhi

by Dr. Singaravelu Sachithanantham

90%
Reading Progress
Local First