Books
Arunagirichelvar

Kandhar Anubhudhi

Song 29 - illE enum mAyaiyil (இல்லே எனும் மாயையில்)

~ 1 min read

Tamil Lyrics

இல்லே யெனுமா யையிலிட் டனைநீ!
பொல்லே னறியா மைபொறுத் திலையே?
மல்லே புரிபன் னிருவா குவிலென்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே!

Tamil Lyrics (Split)

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ!
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே?
மல்லே புரி, பன்னிரு வாகுவில், என்
சொல்லே புனையும், சுடர் வேலவனே!

Tamil Meaning

இல்வாழ்க்கை என்னும் மாய வாழ்வில் அடியேனைச் சிக்கவைத்துள்ள தேவரீர், கொடியவனாகிய அடியேனது அறியாமையைப் பொறுத்து மன்னித்தருளவில்லையே! மற்போர் செய்வதற்குரிய பன்னிரண்டு தோள்களிலும் அடியேனின் சொற்களாலாகிய பாடல்களையே மாலைகளாக அணிந்துகொள்ளும் ஒளிவீசும் வேலாயுதரே!

English Lyrics

illE enum mAyaiyil ittanai nee
pollEn aRiyAmai poRuththilaiyE
mallE puri panniru vAguvil en
sollE punaiyum sudar vElavanE!

English Meaning

O, Lord, You have caused me to be entangled in the illusory married life; [however] You have not granted me the boon of forgiving my ignorance! You are wearing the garlands consisting of the words of my adoration on Your twelve shoulders meant for wrestling, and You are the bearer of the lustrous lance!

· WhatsApp
Books

Kandhar Anubhudhi

by Dr. Singaravelu Sachithanantham

58%
Reading Progress
Local First