Tamil Lyrics
ஆனா அமுதே! அயில்வே லரசே!
ஞானா கரனே! நவிலத் தகுமோ?
யானாகிய வென்னை விழுங்கி, வெறுந்
தானாய் நிலைநின் றது,தற் பரமே.
Tamil Lyrics (Split)
ஆனா அமுதே! அயில்வேல் அரசே!
ஞானாகரனே! நவிலத் தகுமோ?
யானாகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது, தற்பரமே?
Tamil Meaning
இனிய அமுதமே! கூரிய வேலாயுதத்தை ஏந்திய மாமன்னரே! ஞானத்தின் இருப்பிடமே! 'யான்' என்னும் ஆணவமுடைய அடியேனை, தேவரீர் ஆட்கொண்டு அருளி ,எல்லாம் தானாகி, நிலைத்திருக்கும் மேலான நிலையை ,இத்தன்மையது என்று விளக்கிக் கூறமுடியுமோ?
English Lyrics
AnA amudhE! ayilvEl arasE!
njAnAgaranE! navilath thagumO
yAnAgiya ennai vizhungki veRum
thAnAi nilai nindRadhu thaRtparamE?
English Meaning
O, Lord, You are the ambrosia of eternity! You are the Supreme Ruler holding the weapon of lance! You are the abode of spiritual wisdom! Could You please explain the supreme divine state, whereby You were gracious enough to accept an egoistic person like myself as Your devotee, become everything Yourself, and yet remain the eternal Supreme Being?
