Tamil Lyrics
மகமாயை களைந்திட வல்லபிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே!
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங்குவதே!
Tamil Lyrics (Split)
மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறு மொழிந்தும் ஒழிந்திலனே!
அகம் மாடை மடந்தையர் என்று அயரும் அகம் மாடை
சக மாயையுள் நின்று தயங்குவதே!
Tamil Meaning
[இவ்வுலக வாழ்க்கையைச் சார்ந்த பொய்யான காட்சிகளாலும் நம்பிக்கைகளாலுமான] பெரிய மாயையை நீக்கவல்ல கடவுளான திருமுருகப்பெருமான் தன் ஆறு திருமுகங்களாலும் பல வழிகளில் உபதேசித்து அருளிய தத்துவங்களை, அந்தோ, [மீண்டும் நினைவுகூர்ந்து] சொல்லாமற் போய்விட்டேனே! 'வீடு-செல்வம்-துணிமணி-மாதர்கள்' ஆகியவற்றால் [இறுதியில் பெரும் வருத்தத்தைத் தரும் பொய்யான] இவ்வுலக மாயையில் அகப்பட்டுக் கொண்டு அதை உண்மை என்று நம்பி அடியேன் இன்னும் தயங்கிக்கொண்டிருக்கின்றேனே!
English Lyrics
maga mAyai kaLaindhida valla pirAn
mugam ARu mozhindhu mozhindhilanE!
agam Adai madandhaiyar endRu ayarum
saga mAyaiyuL nindRu thayangkuvadhE!.
English Meaning
The all-powerful Lord Thirumurugapperumaan with Six Sacred Faces expounded to me several precepts in order to get rid of the great deceitful illusion of this worldly life. Alas, I failed to [remember and] say those precepts. [After being caught up in the worldly illusion about one's home, clothes and women [which in the end only brings me great distress], I am still being hesitant, believing it to be real!
