Tamil Lyrics
திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்புமதோ?
பணியா வெனவள் ளிபதம் பணியுந்
தணியா வதிமோ கதயா பரனே!
Tamil Lyrics (Split)
திணியான மனோ சிலைமீது, உன(து)தாள்
அணிஆர் அரவிந்தம் அரும்பும் அதோ?
” பணியா”, என வள்ளிபதம் பணியும்
தணியா அதிமோக தயாபரனே!
Tamil Meaning
அடியேனின் கடினமான கல்போன்ற மனத்தின்மீது தேவரீரின் திருவடிகளாகிய அழகுநிறைந்த தாமரைப் பூக்கள் மலரக்கூடுமோ? வள்ளியம்மையாரின் திருவடிகள் மீது குறையாத மிக்க காதல் கொண்ட கருணாகரனே! அடியேன் செய்யவேண்டிய பணிகள் எவை என்று கூறுவீரோ?
English Lyrics
thiNiyAna manOsilaimeedhu unadhuthAL
aNi Ar aravindham arumbumadhO?
paNiyA ena vaLLipadham paNiyum
thaNiyA adhimOga thayAbaranE!.
English Meaning
O, Lord, will Your beautiful lotus-flower-like Sacred Feet ever blossom over the hard stone-like heart of mine? O, Lord of compassion! You have the great undiminished love for the Sacred Feet of Valli-ammaiyaar! Could You please tell me about the tasks, which I have to carry out?
