Tamil Lyrics
மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்?
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்,
நிட்டூர! நிராகுல நிர்ப்பயனே!
Tamil Lyrics (Split)
மட்டுஊர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டுஊசல்படும் பரிசு என்று ஒழிவேன்?
தட்டுஊடு அற வேல் சயிலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே!
Tamil Meaning
தேன்சொரியும் நறுமண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலையுடைய பெண்களின் மோகவலையில் சிக்கிக்கொண்டு உள்ளம் தடுமாற்றம் அடையும் துன்பத்திலிருந்து அடியேன் எப்போது நீங்குவேன்? தடைகள் எதுவுமின்றி [கிரவுஞ்ச மலையை] ஊடுருவிச் செல்லும்படி வேற்படையை எறிந்த வலிமையுடையவரும், துன்பமும் பயமும் அற்றவருமான திருமுருகப்பெருமானே!
English Lyrics
mattu Ur kuzhal mangaiyar maiyal valaip
pattu Usalpadum parisu endRu ozhivEn?
thattu Udu aRa vEl sayilaththu eRiyum
nittUra nirAkula nirppayanE!.
English Meaning
O, Lord, when will I get away from the suffering of my mind being caught and bewildered in the net of passion for women, whose hair is adorned with fragrant and honey-trickling flowers? You are the fearless and grief-free Lord Thirumurugapperumaan, who hurled the lance, which pierced and penetrated [the kraunca-hill] without any obstruction!
