Tamil Lyrics
கார்மா மிசைகா லன்வரிற், கலபத்
தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப! வலாரி, தலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே!
Tamil Lyrics (Split)
கார் மாமிசை காலன் வரின், கலபத்து
ஏர் மாமிசை வந்து எதிரப் படுவாய்
தார்மார்ப! வலாரி, தலாரி எனும்
சூர்மா மடியத், தொடு வேலவனே!
Tamil Meaning
கரிய எருமைக்கடாவின்மீது அடியேனின் உயிரைக் கவர்ந்து செல்லவேண்டி யமன் வரும்பொழுது அழகிய தோகைகளையுடைய மயிலின்மீது ஏறி அடியேன் முன்வந்து காப்பாற்றியருள்வீராக! மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மார்பினையுடையவரே! 'வலாரி' எனப்படும் இந்திரனின் விண்ணுலகத்திற்குப் விரோதியாகிய சூரபன்மன் [ஒளிந்திருந்த மாமரம்] அழிந்துபோகுமாறு வேலாயுதத்தை வீசிய திருமுருகப்பெருமானே!
English Lyrics
kAr mAmisai kAlan varin kalabaththu
Er mAmisai vandhu edhirap paduvAi
thArmArba valAri thalAri enum
sUrmA madiyath thodu vElavanE!
English Meaning
O, Lord, please come before me riding on the peacock with the plumage of beautiful feathers, and graciously protect me when Yaman ['death'] comes along riding on the dark male buffalo in order to capture my life! O, Lord Thirumurugapperumaan, Your chest is adorned with garlands, and You hurled the lance [when the demon Soorapanman was hiding in a mango-tree] and destroyed the demon, who is the enemy of Valaari's [Indra's] celestial abode!
