Tamil Lyrics
பாழ்வாழ் வெனுமிப் படுமாயையிலே
வீழ்வாயென என்னை விதித்தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ?
வாழ்வா யினிநீ மயில்வா கனனே!
Tamil Lyrics (Split)
‘பாழ்வாழ்வு எனும் இப்படுமாயையிலே
வீழ்வாய், ‘என என்னை விதித்தனையே!
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ மயில்வாகனனே!
Tamil Meaning
மயிலை வாகனமாகக் கொண்டுள்ள திருமுருகப்பெருமானே! பாழ்படுவதான வாழ்க்கை என்னும் இந்தப் பெரிய மாயைச் சூழலிலே அடியேன் வீழ்க என்று தேவரீர் விதித்துவிட்டீரே! தேவரீர் அடியேனை இங்ஙனம் மாயை வாழ்வில் தள்ளி சிக்கவைத்தற்கு ஏற்கனவே அடியேன் செய்துள்ள தாழ்வான செயல்கள் ஏதேனும் காரணமாக உள்ளனவோ? அது எவ்வாறாயினும் தேவரீர் நீடு வாழ்வீராக!
English Lyrics
pAzhvAzhvu enum ippadumAyaiyilE
veezhvAi ena ennai vidhiththanaiyE
thAzhvAnavai seidhavaithAm uLavO
vAzhvAi ini nee mayilvAgananE!
English Meaning
O, Lord Thirumurugapperumaan! You have the peacock as Your vehicle! You have determined that I should fall into this huge illusory swirl known as the life which is bound to be ruined! Are there any despicable deeds done by me already, which are the reason for pushing me to be entangled in this illusory life? Whatever it may be, may You live long!
