Tamil Lyrics
கலையே பதறிக் கதறித் தலையூ
டலையே படுமா றதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்
மலையே! மலைகூறிடு வாகையனே!
Tamil Lyrics (Split)
கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ?
கொலையே புரி, வேடர்குலப் பிடி தோய்
மலையே! மலை கூறிடு வாகையனே!
Tamil Meaning
வெற்றி வேலனே! கலை சார்ந்த நூல்களையே அடியேன் கலக்கத்துடன் விரைந்து உருப்போட்டுக்கற்று, தலை வேதனையுறும்படி ஆகிவிடவோ? கொலைத்தொழில் புரியும் வேடர் குலத்தில் தோன்றிய பெண் யானையைப் போன்ற வள்ளியம்மையாரைச் சேர்ந்தவரும், கிரவுஞ்ச மலையை வெற்றி வேலால் பிளந்தவருமான மலைபோன்ற கடவுளே!
English Lyrics
kalaiyE padhaRik kadhaRith thalaiyUdu
alaiyE padumARu adhuvAi AiyvidavO
kolaiyE puri vEdarkulap pidi thOi
malaiyE malai kURidu vAgaiyanE!
English Meaning
O, Lord! You are holding the lance of victory! Shall I hastily and with bewilderment memorize only the books of art, and experience the agony in my head? O, Lord! You are united with the marauding hunter's female elephant-like maiden Valli-ammayaar, and You are the mountain-like God! You split open the Kraunca-hill, where the demon Soorapanman was hiding, with the lance of victory!
