Tamil Lyrics
பேராசை எனும் பிணியிற் பிணிபட்
டோரா வினையே னுழலத் தகுமோ?
வீரா! முதுசூர் படவே லெறியுஞ்
சூரா! சுர லோக துரந்தரனே!
Tamil Lyrics (Split)
பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா! முதுசூர் படவேல் எறியுஞ்
சூரா! சுரலோக துரந்தரனே!
Tamil Meaning
பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற்கொண்டு அடியேன் இவ்வாறு அலைந்து திரிவது தகுமோ? தெய்வீக வீரரே! பழங்காலத்து அசுரன், சூரபன்மன் இறந்தொழியும்படி வேலாயுதத்தைச் செலுத்திய சூரரே! தேவருலகைக் காப்பாற்றியவரே!
English Lyrics
pErAsai enum piNiyil piNipattu
OrA vinaiyEn uzhalath thagumO
veerA mudhusUr padavEl eRiyunj
sUrA suralOga thurandharanE!
English Meaning
Is it proper that I should wander around by being bound by the disease of greediness by undertaking deeds without examining and knowing what is good and bad? O Lord, You are the Supreme divine hero, who released the weapon of lance, so that the ancient demon Soorapanman should die and perish, and thus You graciously protected the world of the celestials!
