Books
Arunagirichelvar

Kandhar Anubhudhi

Song 15 - murugan kumaran (முருகன் குமரன்)

~ 1 min read

Tamil Lyrics

முருகன், குமரன், குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்?
பொருபுங் கவரும், புவியும், பரவுங்
குருபுங்கவ! எண்குண பஞ்சரனே!

Tamil Lyrics (Split)

முருகன், குமரன் ,குகன் என்று மொழிந்து
உருகும் செயல்தந்து உணர்வு என்று அருள்வாய்?
பொரு புங்கவரும், புவியும், பரவும்
குருபுங்கவ! எண்குண பஞ்சரனே!

Tamil Meaning

'முருகா, குமரா, குகா!' என்று மனம் உருகி அழைக்கும் செயலொழுக்கத்தையும் ஞானத்தையும் எப்போது அருள்வீர்?' என்று பக்தியுடன் பொருந்தி நிற்கும் வானோரும் இப்பூவுலகத்தினரும் துதித்துப் போற்றும் ['தன் வயத்தம், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, பற்றின்மை, பேரருள், எல்லாம்வன்மை, வரம்பிலா இன்பம்' என்னும்] எட்டு வகையான தெய்வீகக் குணங்களாலாகிய பஞ்சரத்தில் வதியும் மகா குருவாகிய திருமுருகப்பெருமானே!

English Lyrics

murugan kumaran guhan endRu mozhindhu
urugum seyalthandhu uNarvu endRu aruLvAi
poru pungkavarum puviyum paravum
gurupungkava eN guNa pancharanE!

English Meaning

O, Lord Thirumurugapperumaan! You are the Supreme Preceptor, abiding in the abode, made of eight divine qualities [namely, self-existence, purity, natural wisdom, perfect wisdom, detachment, magnanimous grace, omnipotence, and limitless bliss]! You are the Lord, who is adored and praised by the pious celestials and the dwellers of the earth, and they anxiously enquire when You will graciously grant them the melting devotional act and wisdom of adoring You as Murugaa! Kumaraa! Kugaa!

· WhatsApp
Books

Kandhar Anubhudhi

by Dr. Singaravelu Sachithanantham

31%
Reading Progress
Local First