Tamil Lyrics
உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா!
அதிகா! அநகா! அபயா! அமரா
பதிகா வல!சூர பயங் கரனே!
Tamil Lyrics (Split)
உதியா, மரியா, உணரா, மறவா,
விதி,மால் அறியா விமலன் புதல்வா!
அதிகா! அநகா! அபயா! அமரா
பதிகாவல!சூர பயங்கரனே!
Tamil Meaning
சிவபெருமானின் மைந்தரே! பிறவாமலும், இறவாமலும், உணராமலும், மறவாமலும், பிரமனும் திருமாலும் அறியாமலும் விளங்குபவரே! யாவரினும் மேம்பட்டவரே! பாவமற்றவரே! புகலிடம் அளிக்கும் மூர்த்தியே! வானுலகைக் காத்தருளும் பெருமானே! சூரபன்மனுக்கு அச்சம் தருபவரே!
English Lyrics
udhiyA mariyA uNaRa maRavA
vidhimAl aRiyA vimalan pudhalvA!
adhigA! anagA! abayA! amarA!
padhigA! valasUra! bayangaranE!
English Meaning
O, Lord, You are the Divine Son of the pure being Lord Sivaperumaan, and You are one, who is neither born, nor dies, neither remembers nor forgets, and whom neither Brahmaa nor Thirumaal knows. You are the ultimate Supreme Being, who is sinless, who grants refuge to all devotees, protects the celestial world, and causes fear to the demon Soorapanman!
