Tamil Lyrics
வடிவுந் தனமும் மனமுங் குணமுங்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வேல் அரசே!
மிடியென்றொரு பாவி வெளிப் படினே!
Tamil Lyrics (Split)
வடிவும் ,தனமும் ,மனமும், குணமும்,
குடியும், குலமும் குடிபோகியவா,
அடிஅந்தம் இலா அயில்வேல் அரசே!
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே!
Tamil Meaning
கூரிய வேலாயுதத்தை ஏந்தியவாறு பிரபஞ்சத்தை ஆளும், ஆதியும் அந்தமும் இல்லாத மாமன்னரே! 'வறுமை' என்னும் ஒரு பாவி தோன்றியவுடனே அழகும், செல்வமும், நல்ல மனமும், குணமும், குடும்பத்தின் பெருமையும், குலத்தின் பெருமையும் ஒருவரை விட்டுப் போய்விடுகின்றனவே!
English Lyrics
vadivum thanamum manamum guNamum
kudiyum kulamum kudibOgiyavA,
adi andham ilA ayilvEl arasE!
midi endRoru pAvi veLippadinE!
English Meaning
O, Supreme Ruler of the Universe! [It is strange, indeed, that] no sooner does the sinful poverty appear, beauty as well as wealth, good mind and character, and the greatness of family and lineage also desert a person!
