Books
Arunagirichelvar

முருகன் பாமாலை

sivagiri vakuppu

~ 4 min read

சிவகிரி வகுப்பு

முன்னுரை

சிவகிரி - பழநி என்றாவது சிவகிரி என்னும் தனித்தல - மாகவாவது கொள்ளலாம்.

சிவகிரி வகுப்பு (மூலம்)

தத்த தத்த தத்த தத்த
தத்த தத்த தத்த தத்த
தத்த தத்த தத்த தத்த தனதானனா

மெத்த மெத்த அக்ர மத்தின்
மெத்த மெத்த விக்ர மத்தின்
மெத்த மெத்த உக்ர வெற்றி மிகுபாசமே

விட்டு விட்டு றுக்கு றுக்கு
கட்டு கட்டு குத்து குத்து
வெட்டு வெட்டெ னச்சி னத்து நமனாடியே

சத்த மிட்ட தட்டி நெட்டெ
யிற்றி னைக்க டித்து றுக்கு
தர்க்க மிட்டெ னைப்பி டிக்க வருபோதிலே

தத்த ளிக்கு புத்தி யைத்தி
டப்ப டுத்தி யொத்தி டத்த
ணிப்பு றுத்தி மெய்த்து ணைக்கு வரவேணுமே

எத்த லத்து மெப்ப திக்கும்
எப்ப டிக்கும் எச்ச ரித்து
நற்ப தத்தை யுச்ச ரிக்கும் நினைவாகியே

இட்டம் வைத்த வர்க்க நுக்ர
கச்ச முத்ர வித்தை யிற்ப்ர
சித்த நித்ய முத்த மிழ்க்கும் அருள்போதனே

அத்ர பத்ர சித்ர மிட்ட
யிற்ப டைத்த யிற்கி ணைத்த
லர்க்க ணுற்ற பொற்கு றத்தி மணவாளனே

அத்த னுக்கு மைக்கி தத்த
புத்ர சித்தி முத்தி யைச்செ
யற்பு தச்சி வக்கி ரிக்குள் முருகேசனே.

சிவகிரி வகுப்பு(பதம் பிரித்தது)

மெத்த மெத்த அக்ரமத்தின்
மெத்த மெத்த விக்ரமத்தின்
மெத்த மெத்த உக்ர வெற்றி மிகு பாசமே

விட்டு விட்டு உறுக்கு உறுக்கு
கட்டு கட்டு குத்து குத்து
வெட்டு வெட்டு எனச் சினத்து நமன் நாடியே

சத்தமிட்டு அதட்டி நெட்
எயிற்றினைக் கடித்து உறுக்குடு
தர்க்கம் இட்டு எனைப் பிடிக்க வருபோதிலே

தத்தளிக்கு புத்தியைத்டு
திடப்படுத்தி ஒத்திடடு தணிப்பு
உறுத்தி மெய்த் துணைக்கு ரவேணுமே

எத்தலத்தும்எப்பதிக்கும்
எப்படிக்கும் எச்சரித்து
நற்பதத்தை உச்சரிக்கும் நினைவாகியே

இட்டம் வைத்தவர்க்குஅநுக்ரகச்
சமுத்ர வித்தையில்ப்ரசித்த(ம்)
நித்ய(ம்) முத்தமிழ்க்கும் அருள்போதனேடு

அத்ர(ம்) பத்ர(ம்) சித்ரம்இட்ட
அயில் படைத்த அயிற்குஇணைத்து
அலர்க் கண் உற்ற பொற் குறத்தி மணவாளனே

அத்தனுக்கு உமைக்கு இதத்தடு
புத்ர சித்தி முத்தியைச் செய்
அற்புதச் சிவக்கிரிக்குள் முருகேசனே

பதவுரை

மிக அதிகமாக அக்ரமம் - அநீதியான செயல்களைச் செய்தோரிடம், மிக அதிகமான

22.சிவகிரி வகுப்பு

பராக்ரமத்துடனே - மிக அதிகமான உக்ரமும் - கடுங் கோபமும், ÿ¤யமும் மிக்குள்ள பாசக் கயிற்றையே,

எறிந்தெறிந்து, கோபித்து அதட்டுக அதட்டுக, கட்டுக கட்டுக, குத்துக குத்துக, வெட்டுக வெட்டுக, - என்று கூறிச் கோபம் கொண்டுள்ள எமன் என்னைத்) தேடி வந்து,

கூச்சலிட்டு வெருட்டிப் பயப்படுத்தி நீண்ட பற்களைக் கோபத்துடன் வாது செய்து என்னைப் பிடிக்க வரும் அந்த சமயத்திலே,

தடுமாறுகின்ற எனது புத்தியைத் தைரியப்படுத்தி அதற்கேற்பத் மன அமைதியைப் புகட்டி உண்மைத் துணை செய்ய (நீ) வந்தருள வேண்டும்.

எவ்விடத்தும், எல்லா ஊர்களிலும், எல்லா நிலையிலும் எச்சரிப்பு - ஜாக்கிரதையுடன்

22.சிவகிரி வகுப்பு

நல்ல பதம் - சிறந்த எழுத்தாகிய உனது ஆறெழுத்தை ÿ¤பிக்கின்ற நினைவு தவறாது

விருப்பம் வைத்த அடியார்களுக்கு திரு அருளுடனே கடலனைய கல்வியில் - கல்விக் கடலிலே கீர்த்தி கொண்டதும் அழியாததுமான இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் அறிவும் கைகூட அருள் புரிகின்ற குரு மூர்த்தியே!

அத்திர பத்திர சித்திரம் இட்ட - படையாகிய அம்பு அல்லது வாளுக்கும்,, அழகு வாய்ந்த அல்லது அலங்காரத்தோடு கூடியதும் கூர்மை கொண்டதுமான வேலுக்கும், ஒப்பாக மலர்ந்துள்ள கண்களைக் கொண்ட பொற் குறத்தி அழகிய குறப்பெண். வள்ளியின் மணவாளனே!

சிவபிரானுக்கும் பார்வதிக்கும் இன்பம் தருகின்ற புதல்வனே! அஷ்ட சித்திகளையும், மோக்ஷ வீட்டையும் தந்து உதவும், அற்புத மூர்த்தியே! சிவகிரி என்னும் தலத்தில் (வீற்றிருக்கும்) முருக மூர்த்தியே! (அல்லது) சித்தியையும் முத்தியையும கூட்டுவிக்கும் அற்புதகரமான சிவகிரியில் வீற்றிருக்கும் முருகேசனே!

பதம் பிரித்து சொல்டுவிளக்கம்

1. மெத்த மெத்த அக்ரமத்தின் மெத்த மெத்த விக்ரமத்தின் மெத்த மெத்த உக்ர வெற்றி மிகு பாசமே (மெத்த மெத்த) மிக அதிகமாக (அக்ரமத்தின்) அக்ரமம் - அநீதியான செயல்களைச் செய்தோரிடம், (மெத்த மெத்த) மிக அதிகமான

22.சிவகிரி வகுப்பு

(விக்ரமத்தின்) பராக்ரமத்துடனே - (மெத்த மெத்த) மிக அதிகமான (உக்ர வெற்றி) உக்ரமும் - கடுங் கோபமும், ÿ¤யமும் மிக்குள்ள (பாசமே) பாசக் கயிற்றையே,

2. விட்டு விட்டு உறுக்கு உறுக்கு கட்டு கட்டு குத்து குத்து வெட்டு வெட்டுஎனச் சினத்(ந் )து நமனாடியே

(விட்டு விட்டு) எறிந்தெறிந்து, (உறுக்கு உறுக்கு) கோபித்து அதட்டுக அதட்டுக, கட்டுக கட்டுக, குத்துக குத்துக, வெட்டுக வெட்டுக, (என) - என்று கூறிச் (சினந்து) கோபம் கொண்டுள்ள (நமன்) எமன் (நாடியே) ( என்னைத்) தேடி வந்து,

3. சத்தமிட்டுஅதட்டி நெட்டு

எயிற்றினைக் கடித்து உறுக்கு

தர்க்கம்இட்டுஎனைப் பிடிக்க வருபோதிலே

(சத்தமிட்டு) கூச்சலிட்டு (அதட்டி) வெருட்டிப் பயப்படுத்தி (நெட்டு எயிற்றினை) நீண்ட பற்களைக் (கடித்து) (உறுக்கு) கோபத்துடன் (தர்க்கமிட்டு) வாது செய்து (எனைப் பிடிக்க) என்னைப் பிடிக்க வரும் அந்த சமயத்திலே,

4. தத்தளிக்கு புத்தியைத்

திடப்படுத்தி ஒத்திடத்

தணிப்பு உறுத்தி மெய்த் துணைக்கு வரவேணுமே

(தத்தளிக்கு புத்தியை) தடுமாறுகின்ற எனது புத்தியைத் (திடப்படுத்தி) தைரியப்படுத்தி (ஒத்திடத்) அதற்கேற்பத் (தணிப்பு உறுத்தி) மன அமைதியைப் புகட்டி (மெய்த் துணைக்கு) உண்மைத் துணை செய்ய (நீ) வந்தருள வேண்டும்.

5. எத்தலத்தும்எப்பதிக்கும் எப்படிக்கும் எச்சரித்து

நற்பதத்தை உச்சரிக்கும் நினைவாகியே

(எத்தலத்தும்) எவ்விடத்தும், (எப்பதிக்கும்) எல்லா ஊர்களிலும், (எப்படிக்கும்) எல்லா நிலையிலும் (எச்சரித்து) எச்சரிப்பு - ஜாக்கிரதையுடன்

22.சிவகிரி வகுப்பு

(நற்பதத்தை) நல்ல பதம் - சிறந்த எழுத்தாகிய உனது ஆறெழுத்தை (உச்சரிக்கும்) ÿ¤பிக்கின்ற (நினைவாகியே) நினைவு தவறாது

6. இட்டம் வைத்தவர்க்குஅநுக்ரகச் சமுத்ர வித்தையில்ப்ரசித்த(ம்) நித்ய(ம்) முத்தமிழ்க்கும் அருள்போதனே

(இட்டம் வைத்தவர்க்கு) விருப்பம் வைத்த அடியார்களுக்கு (அநுக்கிரகம்) திரு அருளுடனே (சமுத்திர வித்தையில்) கடலனைய கல்வியில் - கல்விக் கடலிலே (ப்ரசித்தம்) கீர்த்தி கொண்டதும் (நித்யம்) அழியாததுமான (முத்தமிழுக்கும்) இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் அறிவும் கைகூட அருள் புரிகின்ற (போதனே) குரு மூர்த்தியே!

7. அத்ர(ம்) பத்ர(ம்) சித்ரம்இட்ட

அயில் படைத்த அயிற்குஇணைத்து

அலர்க் கண் உற்ற பொற் குறத்தி மணவாளனே

அத்திர பத்திர சித்திரம் இட்ட - (அத்திரம்) படையாகிய (பத்திரம்) அம்பு அல்லது வாளுக்கும், (சித்திரம் இட்ட) , அழகு வாய்ந்த அல்லது அலங்காரத்தோடு கூடியதும் (அயில் படைத்த) கூர்மை கொண்டதுமான (அயிற்கு) வேலுக்கும், (இணைத்து) ஒப்பாக (அலர்) மலர்ந்துள்ள (கண் உற்ற) கண்களைக் கொண்ட பொற் குறத்தி அழகிய குறப்பெண் . வள்ளியின் மணவாளனே!

8. அத்தனுக்கு உமைக்கு இதத்த புத்ர சித்தி முத்தியைச் செய் அற்புதச் சிவக்கிரிக்குள் முருகேசனே.

(அத்தனுக்கு) சிவபிரானுக்கும் (உமைக்கு) பார்வதிக்கும் (இதத்த) இன்பம் தருகின்ற (புத்ர) புதல்வனே! (சித்தி முத்தியை) அஷ்ட சித்திகளையும், மோக்ஷ வீட்டையும் (செய்) தந்து உதவும், அற்புத மூர்த்தியே! சிவகிரி என்னும் தலத்தில் (வீற்றிருக்கும்) முருக மூர்த்தியே! (அல்லது) சித்தியையும் முத்தியையும கூட்டுவிக்கும் அற்புதகரமான சிவகிரியில் வீற்றிருக்கும் முருகேசனே!

· WhatsApp
Books

முருகன் பாமாலை

by Dubai Nagarathar Sangam

85%
Reading Progress
Local First