Books
Arunagirichelvar

முருகன் பாமாலை

veera vaal vakuppu

~ 6 min read

வீரவாள் வகுப்பு

முன்னுரை

வீரவாள் வகுப்பு வீரவாகுத் தேவரின் வாட்படையின் சத்தியைக் கூறிற்று.

வீரவாள் வகுப்பு (மூலம்)

தானனா தத்ததன தானனா தத்ததன
தானனா தத்ததன தந்ததாத் தனனா

பூவுளோ னுக்குமுயர் தேவர்கோ னுக்கும்எழு
பூவில்யா வர்க்கும்வரு துன்புதீர்த் திடுமே

பூதசே னைக்குள் ஒரு கோடிசூர் யப்பிரபை
போலமா யக்கரிய கங்குல்நீக் கிடுமே

பூதிபூ சிப்பரமர் தோலைமேல் இட்டதொரு
போர்வைபோல் நெட்டுறைம ருங்குசேர்த் திடுமே

போரிலே நிர்த்தம்இடு வீரமா லக்ஷ்மிமகிழ்
பூசைநே சித்துமலர் தும்பைசாத் திடுமே

பாவ்ரு பக்கொடிய சூரனார் பெற்றபல
பாலர்மா ளத்தசைகள் உண்டுதேக் கிடுமே

பாநுகோ பப்பகைஞன் மேனிசோ ரக்குருதி
பாயவே வெட்டியிரு துண்டமாக் கிடமே

பாடுசேர் யுத்தகள மீதிலே சுற்றுநரி
பாறுபேய் துய்த்திடநி ணங்க்ளுட் டிடுமே

பாடிஆ டிப்பொருத போரிலே பத்திரக
பாலிசூ லப்படையை வென்றுதாக் கிடுமே

ஆவலா கத்துதிசெய் பாவலோர் மெய்க்கலிக
ளாமகோ ரக்களைக ளைந்துநீக் கிடுமே

யாருமே அற்றவன்என் மீதொர்ஆ பத்துறவ
ராமலே சுற்றிலும்இ ருந்துகாத் திடுமே

ஆடல்வேள் நற்படைகள் ஆணையா வுக்குமுதல்
ஆணையா வைத்துவலம் வந்துபோற் றிடுமே

ஆலகா லத்தைநிகர் காலசூ லத்தையும
றாதபா சத்தையும்அ ரிந்துபோட் டிடுமே

மேவலார் முப்புரமும் நீறவே சுட்டஒரு
மேருவாம் விற்பரமர் தந்தபாக் கியவான்

வேடர்மா னுக்குமுயர் தேவயா னைக்கும்இசை
வேலர்தா ளைத்தொழுது யர்ந்தவாழ்க் கையினான்

வீறுசேர் மிக்ககண நாதனார் எட்டுவகை
வீரர்நே யத்தமையன் என்றதோட் டுணைவோன்

மேன்மையாம் லக்ஷரத வீரர்பூ சிக்கவரு
வீரவா குத்தலைவன் வென்றவாட் படையே.

வீரவாள் வகுப்புடு(பதம் பிரித்தது)

பூவுளோனுக்கும் உயர் தேவர்கோனுக்கும் எழு
பூவில் யாவர்க்கும் வருடுதுன்பு தீர்த்திடுமே

பூத சேனைக்குள் ஒரு கோடி சூர்யப் பிரபை
போல மாயக் கரியடுகங்குல் நீக்கிடுமே

பூதிபூசிப் பரமர் தோலை மேல் இட்டதொரு
போர்வை போல் நெட்டுறைடுமருங்கு சேர்த்திடுமே

போரிலே நிர்த்தம் இடு வீர மாலக்ஷ்மி மகிழ்
பூசை நேசித்து மலர்டுதும்பை சாத்திடுமே

பாவரூபக் கொடிய சூரனார் பெற்ற பல
பாலர் மாளத் தசைகள்டுஉண்டு தேக்கிடுமே

பாநுகோபப் பகைஞன் மேனி சோரக் குருத
பாயவே வெட்டி இருடுதுண்டம் ஆக்கிடுமே

பாடுசேர் யுத்தகளம்மீதிலே சுற்று நரி
பாறு பேய் துய்த்திடடுநிணங்கள் ஊட்டிடுமே

பாடி ஆடிப் பொருத போரிலே பத்திர
கபாலி சூலப்படையை வென்று தாக்கிடுமே

ஆவலாகத் துதி செய் பாவலோர் மெய்க்
கலிகளாம் அகோரக் களை களைந்து நீக்கிடுமே

யாருமே அற்றவன் என் மீது ஓர் ஆபத்து
உற வராமலே சுற்றிலும் இருந்து காத்திடுமே

ஆடல் வேள் நற்படைகள் ஆணை யாவுக்கும்
முதல் ஆணையா வைத்து வலம் வந்து போற்றிடுமே

ஆலகாலத்தை நிகர் கால சூலத்தையும்
அறாத பாசத்தையும் அரிந்து போட்டிடுமே

மேவலார் முப்புரமும் நீறவே சுட்ட ஒரு
மேருவாம் வில் பரமர் தந்த பாக்கியவான்

வேடர் மானுக்கும் உயர் தேவயானைக்கும் இசை
வேலர் தாளைத் தொழுது உயர்ந்த வாழ்க்கையினான்

வீறு சேர் மிக்க கணநாதனார் எட்டு வகை வீரர்
நேயத் தமையன் என்ற தோள் துணைவோன்

மேன்மையாம் லக்ஷ ரத வீரர் பூசிக்க வரு
வீரவாகுத் தலைவன் வென்ற வாட்படையே

பதவுரை

தாமரைப் பூவில் வாசம்செய்யும்பிரமனுக்கும் பதவியிலுள்ள தேவரா¤னாகிய இந்திரனுக்கும். ஏழுலகத்தில் உள்ள யாவர்க்கும் - வந்த கஷ்டத்தை, வருத்தத்தை நீக்கும் (வீரவாகுத் தேவரின் வாள்)

பூதகண சேனைகளுக்குள் ஒரு கோடிக்கணக்கான சூரிய ஒளிபோன்று விளங்கி

மாயை, அஞ்ஞானம் என்கின்ற கரிய இருளை விலக்கும் (வீரவாகுத்தேவரின் வாள்)

விபூதி பூசியுள்ளவரான சிவபிரான் யானைத்தோலை மேலே போர்த்துள்ளதான, போர்வை போன்றதான (கருநிறத்ததான) நெட்டுறை (பெரிய உறையின்) மருங்கு - உள்புறத்தே சேர்ந்து விளங்கும் (வீரவாகுத் தேவரின் வாள்)

யுத்தகளத்திலே நடனமிடுகின்ற மகாவீர லக்ஷ்மி மகிழும்படி செய்யப்படும் பூஜையை விரும்பி தும்பை மலரைச் சூடிக்கொள்ளும் (வீரவாகுத் தேவரின் வாள்)

பாவமே உரு எடுத்தாற் போன்ற பொல்லாத சூரபத்மா பல பிள்ளைகள் இறந்து போம்படி அவர்தம் மாமிசங்களை உண்டு, ) தெவிட்டும், ஏப்பமிடும் (வீரவாகுத் தேவரின் வாள்)

பாநுகோபனாம் பகைவனுடைய உடலினின்றும் (குருதி சோர - பாய) ரத்தம் சொரிந்து பெருகிப் பாயும்படி அவனை வெட்டி இரண்டு துண்டங்களாக ஆக்கிவிட்டது(வீரவாகுத் தேவரின் வாள்)

பட்டு அழிதல் உண்டாகும் அல்லது போர்த் தொழில் நிறைந்த போர்க்களத்திலே (உணவுக்குச்) சுற்றி வரும் நரி,

பருந்து, பேய்க்கூட்டம் இவை உண்ண மாமிசத்தை உண்ண அளிக்கும் (வீரவாகுத் தேவரின் வாள்)

(வீரப்பேச்சுகளைப்) பேசியும் ஆடியும் போரிட்ட யுத்தத்தில் பத்திரகாளியுடைய சூலாயுதத்தை வென்று தாக்கிற்று (வீரவாகுத் தேவரின் வாள்)

ஆவலாக துதிக்கின்ற கவிவாணர்களுடைய உண்மையான வறுமையாம் உக்கிரமான சோர்வை - அயர்வை போம்படி நீக்கி உதவும் (வீரவாகுத் தேவரின் வாள்)

யாருமே துணையில்லாதவனான என்மேல் ஒரு ஆபத்துக் கூட தொடர்ந்து வராதபடி, என்னைச் சுற்றிலும் இருந்துகாத்து உதவும் (வீரவாகுத் தேவரின் வாள்)

வெற்றி விளங்கும் முருகவேளின் படைகள் (ஆயுதங்களை) ஆணை - ஆக்ஞை - கட்டளைகள் எல்லாவற்றுக்கும் - முதலிற் போற்ற வேண்டிய கட்டளையாகப் பாவித்து, வலம் வந்து அப்படைகளைப் போற்றும் (வீரவாகுத் தேவரின் வாள்)

ஆலகால விஷத்தை ஒத்ததான காலனது சூலாயுதத்தையும் அவன்

கையினின்றும் நீங்காத பாசமாம் கயிற்றையும் அறுத்துத் தள்ளி விடும் (வீரவாகுத் தேவரின் வாள்)

பகைவர்களது திரிபுரங்களும் பொடியாகும்படி சுட்டெரித்த ஒப்பற்ற, மேரு என்கின்ற மலையை வில்லாகக் கெண்ட பரமர் - சிவபிரான் தந்த - பெற்ற புண்ணியமூர்த்தி,

வேடர்கள் வளர்த்த மான் போன்ற வள்ளி நாயகிக்கும், மேம்பாடுடைய தேவசேனைக்கும் மணவாளனாக இசைந்த வேற் பெருமான் - ஆகிய முருகரின் திருவடிகளைப் பணிந்து அப்பணிவினால் மேம்பட்ட வாழ்க்கையை உடையவன், ó

பெருமை வாய்ந்த, மேலான, நந்திகணத்தவர்களVன எண்வகையான வீரர்களின், - அன்புமிக்க தமையன் என்ற தோள் துணைவன் - தோளை ஒத்த சகாயன்

பெருமை வாய்ந்த - ரதங்களை உடைய இலக்க வீரர்கள் போற்றிப் பணிய எழுந்தருளும் வீரவாகு என்னும் பெயர் கொண்ட நாயகன் - ஆகிய பெருமான் - செய்த (பல போர்களிலும்) வெற்றி கொண்டதான வாளாயுதமே.

பதம் பிரித்து சொல் விளக்கம்

1. பூவுளோனுக்கும் உயர் தேவர் கோனுக்கும் எழு பூவில் யாவர்க்கும் வரு துன்பு தீர்த்திடுமே

(பூவுளோனுக்கும்) தாமரைப் பூவில் வாசம்செய்யும்பிரமனுக்கும் (உயர்) பதவியிலுள்ள (தேவர்கோனுக்கும்) தேவரா¤னாகிய இந்திரனுக்கும். (எழு பூவில்) ஏழுலகத்தில் உள்ள யாவர்க்கும் - (வரு) வந்த (துன்பு) கஷ்டத்தை, வருத்தத்தை (தீர்த்திடுமே) நீக்கும் (வீரவாகுத் தேவரின் வாள்)

2. பூத சேனைக்குள் ஒரு கோடி சூர்யப் பிரபை போல மாயக் கரிய கங்குல் நீக்கிடுமே

(பூத சேனைக்குள்) பூதகண சேனைகளுக்குள் (ஒரு கோடி) ஒரு கோடிக்கணக்கான (சூர்யப் பிரபைபோல) சூரிய ஒளிபோன்று விளங்கி

(மாயக் கரிய கங்குல்) மாயை, அஞ்ஞானம் என்கின்ற கரிய இருளை (நீக்கிடுமே) விலக்கும் (வீரவாகுத்தேவரின் வாள்)

3. பூதி பூசிப் பரமர் தோலை மேல் இட்டது ஒரு போர்வை போல் நெட்டு உறை மருங்கு சேர்த்திடுமே

(பூதிபூசி) விபூதி பூசியுள்ளவரான (பரமர்) சிவபிரான் (தோலை மேலிட்டதொரு போர்வை) யானைத்தோலை மேலே போர்த்துள்ளதான , போர்வை போன்றதான (கருநிறத்ததான) நெட்டுறை (பெரிய உறையின்) மருங்கு - உள்புறத்தே (சேர்த்திடுமே) சேர்ந்து விளங்கும் (வீரவாகுத் தேவரின் வாள்)

4. போரிலே நிர்த்தம் இடு வீரமா லக்ஷ்மி மகிழ் பூசை நேசித்து மலர் தும்பை சாத்திடுமே

(போரிலே) யுத்தகளத்திலே (நிர்த்தமிடு) நடனமிடுகின்ற (வீரமா லக்ஷ்மி) மகாவீர லக்ஷ்மி மகிழும்படி செய்யப்படும் பூஜையை (நேசித்து) விரும்பி தும்பை மலரைச் சூடிக்கொள்ளும் (வீரவாகுத் தேவரின் வாள்)

5. பாவ ரூபக் கொடிய சூரனார் பெற்ற பல

பாலர் மாளத் தசைகள் உண்டு தேக்கிடுமே

(பாபரூப) பாவமே உரு எடுத்தாற் போன்ற (கொடிய) பொல்லாத (சூரனார்) சூரபத்மா (பெற்ற) பல (பாலர்) பிள்ளைகள் (மாள) இறந்து போம்படி (தசைகள் உண்டு) அவர்தம் மாமிசங்களை உண்டு, (தேக்கிடும் ) தெவிட்டும், ஏப்பமிடும் (வீரவாகுத் தேவரின் வாள்)

6. பாநுகோபப் பகைஞன் மேனி சோரக் குருதி பாயவே வெட்டி இரு துண்டம் ஆக்கிடுமே

பாநுகோபனாம் பகைவனுடைய உடலினின்றும் (சோரக் குருதி பாயவே) (குருதி சோர - பாய) ரத்தம் சொரிந்து பெருகிப் பாயும்படி அவனை வெட்டி இரண்டு துண்டங்களாக ஆக்கிவிட்டது(வீரவாகுத் தேவரின் வாள்)

7. பாடுசேர் யுத்தகளம்மீதிலே சுற்று நரி பாறு பேய் துய்த்திட நிணங்கள் ஊட்டிடுமே

(பாடுசேர்) பட்டு அழிதல் உண்டாகும் அல்லது போர்த் தொழில் நிறைந்த (யுத்தகளம் மீதிலே) போர்க்களத்திலே (உணவுக்குச்) சுற்றி வரும் நரி,

(பாறு) பருந்து, பேய்க்கூட்டம் இவை (துய்த்திட) உண்ண (நிணங்கள்) மாமிசத்தை (ஊட்டிடும்) உண்ண அளிக்கும் (வீரவாகுத் தேவரின் வாள்)

8. பாடி ஆடிப் பொருத போரிலே பத்திர கபாலி சூலப்படையை வென்று தாக்கிடுமே

(பாடி ஆடி) (வீரப்பேச்சுகளைப்) பேசியும் ஆடியும் போரிட்ட யுத்தத்தில் (பத்திர கபாலி) பத்திரகாளியுடைய சூலாயுதத்தை வென்று தாக்கிற்று (வீரவாகுத் தேவரின் வாள்)

9. ஆவலாகத் துதி செய் பாவலோர் மெய்க் கலிகளாம் அகோரக் களை களைந்து நீக்கிடுமே

ஆவலாக (ஆசையுடன்) துதிக்கின்ற (பாவலோர்) கவிவாணர்களுடைய (மெய்க் கலிகளாம்) உண்மையான வறுமையாம் (அகோரம்) உக்கிரமான (களை) சோர்வை - அயர்வை (களைந்து நீக்கும்) போம்படி நீக்கி உதவும் (வீரவாகுத் தேவரின் வாள்)

10. யாருமே அற்றவன் என் மீது ஓர் ஆபத்து உற

வராமலே சுற்றிலும் இருந்து காத்திடுமே

(யாருமே அற்றவன்) யாருமே துணையில்லாதவனான (என்மீது) என்மேல் (ஓர் ஆபத்து உறவராமலே) ஒரு ஆபத்துக் கூட தொடர்ந்து வராதபடி, (சுற்றிலும் இருந்து) என்னைச் சுற்றிலும் இருந்துகாத்து உதவும் (வீரவாகுத் தேவரின் வாள்)

11. ஆடல் வேள் நற்படைகள் ஆணை யாவுக்கும் முதல் ஆணையா வைத்து வலம் வந்து போற்றிடுமே

(ஆடல்) வெற்றி விளங்கும் (வேள்) முருகவேளின் படைகள் (ஆயுதங்களை) ஆணை - ஆக்ஞை - கட்டளைகள் (யாவுக்கும்) எல்லாவற்றுக்கும் - (முதல் ஆணையா வைத்து) முதலிற் போற்ற வேண்டிய கட்டளையாகப் பாவித்து, வலம் வந்து அப்படைகளைப் போற்றும் (வீரவாகுத் தேவரின் வாள்)

12. ஆலகாலத்தை நிகர் கால சூலத்தையும்

அறாத பாசத்தையும் அரிந்து போட்டிடுமே

(ஆல காலத்தை) ஆலகால விஷத்தை (நிகர்) ஒத்ததான (கால சூலத்தையும்) காலனது சூலாயுதத்தையும் (அறாத) அவன்

கையினின்றும் நீங்காத (பாசத்தையும்) பாசமாம் கயிற்றையும் (அரிந்து போட்டிடுமே) அறுத்துத் தள்ளி விடும் (வீரவாகுத் தேவரின் வாள்)

13. மேவலார் முப்புரமும் நீறவே சுட்ட ஒரு மேருவாம் வில் பரமர் தந்த பாக்கியவான்

(மேவலார்) பகைவர்களது (முப்புரமும்) திரிபுரங்களும் (நீறவே) பொடியாகும்படி (சுட்ட) சுட்டெரித்த (ஒரு) ஒப்பற்ற (பரமர்) , மேரு என்கின்ற மலையை (வில்) வில்லாகக் கெண்ட பரமர் - சிவபிரான் தந்த - பெற்ற (பாக்கியவான்) புண்ணியமூர்த்தி,

14. வேடர் மானுக்கும் உயர் தேவயானைக்கும் இசை வேலர் தாளைத் தொழுது உயர்ந்த வாழ்க்கையினான்

வேடர்கள் வளர்த்த மான் போன்ற வள்ளி நாயகிக்கும், (உயர் தேவயானைக்கும்) மேம்பாடுடைய தேவசேனைக்கும் (இசை) மணவாளனாக இசைந்த (வேலர்) வேற் பெருமான் - ஆகிய முருகரின் (தாளைத் தொழுது) திருவடிகளைப் பணிந்து (உயர்ந்த) அப்பணிவினால் மேம்பட்ட வாழ்க்கையை உடையவன், ó

15. வீறு சேர் மிக்க கணநாதனார் எட்டு வகை வீரர் நேயத் தமையன் என்ற தோள் துணைவோன்

(வீறு சேர்) பெருமை வாய்ந்த, (மிக்க) மேலான, (கணநாதனார்) நந்திகணத்தவர்களVன (எட்டு வகை வீரர்) எண்வகையான வீரர்களின், (நேயம்) - அன்புமிக்க தமையன் என்ற தோள் துணைவன் - தோளை ஒத்த சகாயன்

16. மேன்மையாம் லக்ஷ ரத வீரர் பூசிக்க வரு வீரவாகுத் தலைவன் வென்ற வாட்படையே.

(மேன்மையாம்) பெருமை வாய்ந்த (லக்ஷரதவீரர்) - ரதங்களை உடைய இலக்க வீரர்கள் (பூசிக்க) போற்றிப் பணிய (வரு) எழுந்தருளும் (வீரவாகுத் தலைவன்) வீரவாகு என்னும் பெயர் கொண்ட நாயகன் - ஆகிய பெருமான் - (வென்ற) செய்த (பல போர்களிலும்) வெற்றி கொண்டதான (வாட்படையே) வாளாயுதமே.

· WhatsApp
Books

முருகன் பாமாலை

by Dubai Nagarathar Sangam

81%
Reading Progress
Local First