Books
Arunagirichelvar

முருகன் பாமாலை

thirugnaana vezha vakuppu

~ 7 min read

திருஞான வேழ வகுப்பு

முன்னுரை

மௌனஞான விசேடத்தைக் கூறிற்று. சிவமயத் திருஞான வேழம் என்பதிற் சிவஞானத்தை யானைக்கு ஒப்பிட்டார்.

திருஞான வேழ வகுப்பு (மூலம்)

தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன தான தானன

சடலை பட்டலை உடல் எனப்படு
தரும சித்திர கூட மானவை

தவிர நிட்கள வெளியில் நிற்பன
சமய தர்க்கவி ரோத வாதிகள்

தகர எற்றுவ புகர்ம னக்கிரி
தனைமு ருக்குவ, ஆசை ஆணவ

தளைஇ யற்கையை விடந டிப்பன
சனன முற்றிய சாத மாம்எழு

கடல்க டப்பன, படுகொ லைச்சமர்
கடகம் அப்படி சாய மோதுவ

கருவி னைத்தரும் இருவினைத்தொடர்
கழல்ப தத்தன, யோக சாதகர்

களைப றிப்பன, கிளைஎ னப்படு
கவலை சுற்றிய காடு சாடுவ

கருணை மெய்த்தவ திருவ ருட்கன
கவள மொக்குவ, காம ராசனை

அடல்கெ டுப்பன, அகில கற்பனை
அரண் அழிப்பன, கோப மானவை

அவிய நற்பொறை எனுந திப்பிர
ளயம் இறைப்பன, லோப மோகிதம்

அவைமு றிப்பன, மதமு ழுத்தறி
யடிப றிப்பன, ராச தாதியின்

அதிகு ணத்ரய மதில் இடிப்பன,
அளவில் தத்துவ தூளி வீசுவ

திடமு டைச்சிறை மயில் உகைத்தெழு
சிகரி குத்திய வேலை நீள்சுனை

தினமும் உற்பல மலர்தி ருத்தணி
இறைதி ருப்புகழ் பாடு நாவலர்

திரள்ப்ரி யப்பட இனித ளிப்பன
செயலொ ழித்தநு பூதி மீமிசை

திகழும் அற்புத மவுன நிர்க்குண
சிவம யத்திரு ஞான வேழமேs

திருஞான வேழ வகுப்பு (பதம் பிரித்தது)

சடலை பட்டு அலை உடல் எனப்படு
தரும சித்திர கூடம் ஆனவை

தவிர நிட்கள வெளியில் நிற்பன
சமய தர்க்க விரோத வாதிகள்

தகர எற்றுவ புகர் மனக்கிரி
தனை முருக்குவ, ஆசை ஆணவ

தளை இயற்கையை விட நடிப்பன
சனன முற்றிய சாதமாம் எழு

கடல் கடப்பன, படுகொலைச் சமர்
கடகம் அப்படி சாய மோதுவ

கருவினைத் தரும் இருவினைத் தொடர்
கழல் பதத்தன, யோக சாதகர்

களை பறிப்பன, கிளை எனப்படு
கவலை சுற்றிய காடு சாடுவ,

கருணை மெய்த்தவ திருவருள் கன
கவள மொக்குவ, காம ராசனை

அடல் கெடுப்பன, அகில கற்பனை
அரண் அழிப்பன, கோபம் ஆனவை

அவிய நற்பொறை எனு நதிப்
பிரளயம் இறைப்பன, லோப மோகிதம்

அவை முறிப்பன, மதமுழுத் தறி
அடி பறிப்பன, ராச தாதியின்

அதி குணத்ரய மதில் இடிப்பன,
அளவு இல் தத்துவ தூளி வீசுவ

திடம் உடைச்சிறை மயில் உகைத்து
எழு சிகரி குத்திய வேல்

நீள்சுனை தினமும் உற்பல மலர்
திருத்தணி இறை திருப்புகழ் பாடு நாவலர்

திரள் ப்ரியப்பட இனிது அளிப்பன
செயல் ஒழித்து அநுபூதி மீமிசை

திகழும் அற்புத மவுன நிர்க்குண
சிவமயத் திரு ஞான வேழமே

பதவுரை

சடலம் - சடம் - பொய்யிற்பட்டு - நிலையற்று அலைபடுகின்ற உடல் அல்லது சடலை பருத்து வளர்தலை உற்று அலைபடும் உடல்íஎனப்படுகின்றதும் - தரும விதியினால் ஏற்பட்ட தொரு (நல்லறஞ் செய்வதற்கு இடமாய் அமைந்ததான) சித்திர - அதிசயமான அல்லது பொய்யான கூடம் ஆனவை (வீட்டை)

  • நீக்குதற்கு உதவி புரிவதாய், - உருவமற்ற, ஆகாசத்தில் - சிதாகாசத்தில், - விளங்குவன (சிவஞானக்களிற்றின் ஆற்றல்கள்); சமயவாதிகள் செய்யும் தர்க்கங்களில் விரோதமாய் வாதாடுபவர்களைத்

  • சிதற அடித்து, - நீக்குவ (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); - குற்றம் நிறைந்த மனக்கிரிதனை - நெஞ்சம் என்னும், கனகல்லை - முருக்குவ ñ அழிப்பன; (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); ஆசை, ஆணவம் அகங்காரம் என்னும்

  • இயற்கைத் தளையைவிட - இயல்பாகவே உண்டாகின்ற பாசத்தை விலக்கவல்ல, - கோலத்தை மேற்கொள்ள வல்லன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); சனன முற்றிய சாதமாம் எழுகடல் - பிறப்பு என்னும் முடிவான எழுவகைத் தோற்றங்களாம் ஏழு

கடல்களை - எழுவகைப் பிறவிக் கடல்களையும், - கடக்க வல்லன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்) - கொடுமையான கொலைகள் ஏற்படும்சமர் - போரைச் செய்யும், - சேனைகளையும், அப்படி அந்த க்ஷணமே, - குலைந்து அழியும் படி மோதித் தொலைக்க வல்லன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்)

    • பிறப்பைத் தருகின்ற, நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினைச் சங்கிலியாம் விலங்குகளைக், - கழற்றவல்ல - நீக்கவல்ல, - தகுதி கொண்டன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); யோக சாதகம் செய்துள்ளவர்கள் (பயின்றவர்களின்)
  • குற்றத்தை அல்லது சோர்வை, - ஒழிக்க வல்லன, பறித்து எறிய வல்லன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); கிளை - சுற்றம் போல்வரும், (கவலை சுற்றிய காடு) சுற்றிய - சூழ்ந்து வரும், கவலைக்காடு - மனச்சஞ்சலம் என்னும் காட்டைச், அழிக்க வல்லன. (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்);

  • ஈசனது கருணை என்கிற, - உண்மைத் தவத்தின் பேறாகக் கிடைக்கும் இறைவனது திருவருள் எனப்படும், - பெருத்த - நிரம்பிய - உணவை - சோற்றுத் திரளை, - வாரி உண்பன ஒரு சேர விழுங்கி உண்பன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); - காம ராஜனாம் மன்மதனது

  • வலியைஅழிப்பன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); - எல்லாவித கற்பனைகளின் - சூதுகளின் மாயைகளின், - கோட்டைகளை, வலிமையை அழிக்கவல்லன, (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); - கோபச் செய்கைகள் - (அல்லது கோபம் என்கிறமால் நவை - பெரிய குற்றம்)

  • அழியும் படி, - நல்ல பொறுமை என்னும், - ஆற்று வெள்ளத்தை, - வாரி வீசுவன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); (உலோபம்) ஈயாமை, காம மயக்கம்.

  • ஆகியவற்றை, - ஒடித்துஎறிவன செருக்கு என்னும் முற்றிய தூணை அடியோடு பறித்து எறிவன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); - ராஜதம் ஆதிய

மிக்கெழுகின்ற முக்குணங்களின் (ராஜதம், தாமதம், சாத்துவிகம் எனப்படும் முக்குணங்களின்) மதில் - கோட்டைச் சுவர்களை - (முக்குணங்களின் வலிமையை) (இடிப்பன). அழித்தெறிந்து, குணங் கடந்த நிலையைக் கொடுப்பன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்) கணக்கிடுதற்கரிய - அளவிடுதற்கரிய - ìஉண்மை எனப்படும் மலரின் பூந்தாதுக்களை வீசி இறைப்பன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்)

  • வலிமை வாய்ந்த, - சிறகுகளைக் கொண்ட மயிலை ஏறிச் செலுத்தி, :: சூரனுக்குஅரணாயிருந்த - ஏழுமலைகளைக் குத்தி எறிந்த, - வேலாயுதத்தை ஏந்திய - கடவுள்; - நீண்ட சுனையில்

தினந்தோறும் நீலோற் பல மலர்கின்ற திருத்தணி இறை - திருத்தணி கேசரின் திருப்புகழைப் பாடுகின்ற புலவர்களின்

கூட்டம் பிரியப்படும் படி இனிய நற்பொருளை தருவன - (எவைஎனில்) - மனம், வாக்கு, காயம் என்பவற்றால் ஏற்படும் செய்கைகளை அழித்து அனுபவ ஞானத்தின் சிகர - மாக மேலே

விளங்குகின்ற, அற்புதகரமான, - மௌன நிலை எனப்படும் முக்குணங்களைக் கடந்தனவான (சிவமயத் திருஞான வேழமே) சிவமயமாய் விளங்குகின்ற அழகிய ஞானம் என்னும் களிற்றின் ஆற்றல்களே.

பதம் பிரித்து சொல் விளக்கம்

1. சடலை பட்டு அலை உடல் எனப்படு

தரும சித்திர கூடம் ஆனவை

(சடலை) சடலம் - சடம் - பொய்யிற்பட்டு - நிலையற்று அலைபடுகின்ற உடல் அல்லது சடலை பருத்து வளர்தலை உற்று அலைபடும் உடல்íஎனப்படுகின்றதும் - தரும விதியினால் ஏற்பட்ட தொரு (நல்லறஞ் செய்வதற்கு இடமாய் அமைந்ததான) சித்திர - அதிசயமான அல்லது பொய்யான கூடம் ஆனவை (வீட்டை)

2. தவிர நிட்கள வெளியில் நிற்பன

சமய தர்க்கவிரோத வாதிகள்

தவிர - நீக்குதற்கு உதவி புரிவதாய், நிட்கள - உருவமற்ற, வெளியில் ஆகாசத்தில் - சிதாகாசத்தில், நிற்பன - விளங்குவன (சிவஞானக்களிற்றின் ஆற்றல்கள்); சமயவாதிகள் செய்யும் தர்க்கங்களில் விரோதமாய் வாதாடுபவர்களைத்

3. தகர எற்றுவ புகர் மனக்கிரி தனை முருக்குவ, ஆசை ஆணவ

தகர - சிதற அடித்து, எற்றுவ - நீக்குவ (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); புகர் - குற்றம் நிறைந்த மனக்கிரிதனை - நெஞ்சம் என்னும், கனகல்லை - முருக்குவ ñ அழிப்பன; (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); ஆசை, ஆணவம் அகங்காரம் என்னும்

4. தளை இயற்கையை விட நடிப்பன சனன முற்றிய சாதமாம் எழு

தளை இயற்கையைவிட - இயற்கைத் தளையைவிட - இயல்பாகவே உண்டாகின்ற பாசத்தை விலக்கவல்ல, நடிப்பன - கோலத்தை மேற்கொள்ள வல்லன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); சனன முற்றிய சாதமாம் எழுகடல் - பிறப்பு என்னும் முடிவான எழுவகைத் தோற்றங்களாம் ஏழு

5. கடல் கடப்பன, படுகொலைச் சமர் கடகம் அப்படி சாய மோதுவ

கடல்களை - எழுவகைப் பிறவிக் கடல்களையும், கடப்பன - கடக்க வல்லன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்) படுகொலை - கொடுமையான கொலைகள் ஏற்படும்சமர் - போரைச் செய்யும், கடகம் - சேனைகளையும், அப்படி அந்த க்ஷணமே, சாய மோதுவ - குலைந்து அழியும் படி மோதித் தொலைக்க வல்லன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்)

6. கருவினைத் தரும் இருவினைத் தொடர் கழல் பதத்தன, யோக சாதகர்

  • கருவினை தரும் - பிறப்பைத் தருகின்ற, இருவினைத் தொடர் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினைச் சங்கிலியாம் விலங்குகளைக், கழல் - கழற்றவல்ல - நீக்கவல்ல, பதத்தன - தகுதி கொண்டன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); யோக சாதகம் செய்துள்ளவர்கள் (பயின்றவர்களின்)

7. களை பறிப்பன, கிளை எனப்படு கவலை சுற்றிய காடு சாடுவ,

களை - குற்றத்தை அல்லது சோர்வை, பறிப்பன - ஒழிக்க வல்லன, பறித்து எறிய வல்லன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); கிளை எனப்படு - சுற்றம் போல்வரும், (கவலை சுற்றிய காடு) சுற்றிய - சூழ்ந்து வரும், கவலைக்காடு - மனச்சஞ்சலம் என்னும் காட்டைச், சாடுவ அழிக்க வல்லன. (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்);

8. கருணை மெய்த்தவ திருவருள் கன கவள மொக்குவ, காம ராசனை

கருணை - ஈசனது கருணை என்கிற, மெய்த்தவ திருவருள் - உண்மைத் தவத்தின் பேறாகக் கிடைக்கும் இறைவனது திருவருள் எனப்படும், கனம் - பெருத்த - நிரம்பிய கவளம் - உணவை - சோற்றுத் திரளை, மொக்குவ - வாரி உண்பன ஒரு சேர விழுங்கி உண்பன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); காமராசனை - காம ராஜனாம் மன்மதனது

9. அடல் கெடுப்பன, அகில கற்பனை அரண் அழிப்பன, கோபம் ஆனவை

அடல்கெடுப்பன - வலியைஅழிப்பன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); அகில கற்பனை - எல்லாவித கற்பனைகளின் - சூதுகளின் மாயைகளின், அரண் - கோட்டைகளை, வலிமையை (அழிப்பன) அழிக்கவல்லன, (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); கோபமானவை - கோபச் செய்கைகள் - (அல்லது கோபம் என்கிறமால் நவை - பெரிய குற்றம்)

10. அவிய நற்பொறை எனு நதிப்

பிரளயம் இறைப்பன, லோப மோகிதம்

அவிய - அழியும் படி, நல்பொறை எனும் - நல்ல பொறுமை என்னும், நதிப் பிரளயம் - ஆற்று வெள்ளத்தை, இறைப்பன - வாரி வீசுவன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); (உலோபம்) ஈயாமை, மோகிதம் - காம மயக்கம்.

11. அவை முறிப்பன, மதமுழுத் தறி அடி பறிப்பன, ராச தாதியின்

அவை - ஆகியவற்றை, முறிப்பன - ஒடித்துஎறிவன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்) ; மதம் முழுத்தறி - செருக்கு என்னும் முற்றிய தூணை அடிபறிப்பன - அடியோடு பறித்து எறிவன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); ராச தாதியின் - ராஜதம் ஆதிய

12. அதி குணத்ரய மதில் இடிப்பன,

அளவு இல் தத்துவ தூளி வீசுவ;

அதிகுணத்ரயம் - மிக்கெழுகின்ற முக்குணங்களின் (ராஜதம், தாமதம், சாத்துவிகம் எனப்படும் முக்குணங்களின்) மதில் - கோட்டைச் சுவர்களை - (முக்குணங்களின் வலிமையை) (இடிப்பன). அழித்தெறிந்து, குணங் கடந்த நிலையைக் கொடுப்பன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்) (அளவு இல்) கணக்கிடுதற்கரிய - அளவிடுதற்கரிய - (தத்துவ) ìஉண்மை எனப்படும் மலரின் தூளி - பூந்தாதுக்களை வீசுவ - வீசி இறைப்பன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்)

13. திடம் உடைச்சிறை மயில் உகைத்துஎழு சிகரி குத்திய வேல் ஐ நீள்சுனை

திடம் உடை - வலிமை வாய்ந்த, சிறை - சிறகுகளைக் கொண்ட மயிலை உகைத்து - ஏறிச் செலுத்தி, :: (ஏழு சிகிரி) சூரனுக்குஅரணாயிருந்த - ஏழுமலைகளைக் குத்தி எறிந்த, வேல் - வேலாயுதத்தை ஏந்திய - கடவுள்; நீள்சுனை - நீண்ட சுனையில்

14. தினமும் உற்பல மலர் திருத்தணி இறை திருப்புகழ் பாடு நாவலர்

தினந்தோறும் (உற்பல(ம்) மலர்) - நீலோற் பல மலர்கின்ற திருத்தணி இறை - திருத்தணி கேசரின் திருப்புகழைப் பாடுகின்ற நாவலர் - புலவர்களின்

15. திரள் ப்ரியப்பட இனிது அளிப்பன செயல் ஒழித்து அநுபூதி மீமிசை

(திரள்) கூட்டம் பிரியப்படும் படி (இனிது) இனிய நற்பொருளை (அளிப்பன) தருவன - (எவைஎனில்) செயல் - மனம், வாக்கு, காயம் என்பவற்றால் ஏற்படும் செய்கைகளை அழித்து அநுபூதி - அனுபவ ஞானத்தின் சிகர - மாக மேலே

16. திகழும் அற்புத மவுன நிர்க்குண சிவமயத் திரு ஞான வேழமே.

திகழும் - விளங்குகின்ற, அற்புதகரமான, மவுன - மௌன நிலை எனப்படும் நிர்க்குணம் - முக்குணங்களைக் கடந்தனவான (சிவமயத் திருஞான வேழமே) சிவமயமாய் விளங்குகின்ற அழகிய ஞானம் என்னும் களிற்றின் ஆற்றல்களே.

· WhatsApp
Books

முருகன் பாமாலை

by Dubai Nagarathar Sangam

41%
Reading Progress
Local First