Tamil Lyrics
ஆதார மிலே னருளைப் பெறவே
நீதா னொரு சற்று நினைந்திலையே!
வேதாகம ஞான, விநோத!மனோ
தீதா! சுரலோக சிகாமணியே!
Tamil Lyrics (Split)
ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்று நினைந்திலையே!
வேத ஆகம ஞான விநோத! மன
அதீதா, சுரலோக சிகாமணியே!
Tamil Meaning
விண்ணுகத்தின் நாயகமணியே, ஒருதுணையும் இல்லாத அடியேன் தேவரீரின் திருவருளைப் பெறுமாறு சிறிதளவேனும் தேவரீர் எண்ணவில்லையே! வேதங்களாலும் ஆகமங்களாலும் போற்றப்படுபவரே! வேத முதல்வரே! வேதங்களைத் தொகுத்தவரே! ஆகமங்களை வகுத்தவரே! ஞான விநோத மூர்த்தியே! மனத்துக்கு எட்டாதவரே!
English Lyrics
AdhAram ilEn aruLaip peRavE
needhAn oru satRu ninaindhilaiyE
vEdhAgama njAna vinOdha manO
theedhA suralOga sigAmaNiyE!
English Meaning
O, Lord Thirumurugapperumaan! You are the Supreme Jewel of the celestial world! As Your devotee, I have no other companion, and yet You do not think even a little about me attaining Your Sacred Grace! You are the Lord, who is adored by the Vedas and the Aagamas! You are the Supreme Being of the Vedas! You are the Lord, who brought the Vedas into being! You are the Lord, who brought the Aagamas into existence! You are the Sacred personification of rare spiritual wisdom! You are beyond the reach of the mind!
