Tamil Lyrics
மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந்
தையோ! அடியே னலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதுஞ்
செய்யோய்! மயிலேறிய சேவகனே!
Tamil Lyrics (Split)
மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ! அடியேன் அலையத் தகுமோ?
கையோ அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய்! மயிலேறிய சேவகனே!
Tamil Meaning
உண்மை வாழ்வென்று எண்ணி கொடிய வினைக்கு ஈடான, இந்த வாழ்வில் களித்து மகிழ்ந்து, ஐயோ, அடியேன் அலைதல் முறையோ? தேவரீரின் திருக்கரங்கள் மட்டுமன்றி, கையில் ஏந்தும் வேலாயுதம், வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகள் ஆகியவை எல்லாம் செந்நிறமாய் அமைந்து, மயில் வாகனத்தின் மீது ஏறிய மாவீரரே!
English Lyrics
meiyE ena vevvinai vAzhvai ugandhu
aiyO adiyEn alaiyath thagumO
kaiyO ayilO kazhalO muzhudhum
seiyOi mayilERiya sEvaganE!
English Meaning
Is it right that I should wander, by regarding this life of cruel deeds as the real life, and being delighted in it? O, Lord, not only Your Sacred Hands, but also the weapon of lance, held by Your hand, and the Sacred Feet, adorned with heroic anklets, are all of red complexion, and You are the Great warrior riding on Your vehicle of peacock!
