Books
Arunagirichelvar

Kandhar Anubhudhi

Song 23 - adiyaik kuRiyAdhu (அடியைக் குறியாது)

~ 1 min read

Tamil Lyrics

அடியைக் குறியா தறியா மையினான்
முடியக் கெடவோ? முறையோ! முறையோ!
வடிவிக் ரமவேல் மகிபா; குறமின்
கொடியைப் புணருங் குணபூ தரனே!

Tamil Lyrics (Split)

அடியைக் குறியாது அறியாமையினான்(ல்)
முடியக் கெடவோ? முறையோ! முறையோ!
வடி விக்ரம, வேல்மகிபா; குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே!

Tamil Meaning

தேவரீரின் திருவடிகளைத் குறித்துத் தியானிக்காமல் அடியேன் அறிவின்மையால் முழுதும் அழிந்துபடலாமோ? இது முறையோ? கூர்மையும் ஆற்றலும் உடைய வேலாயுதத்தை ஏந்தியவாறு (உலகை ஆளும்) மாமன்னரே, மின்னலையும் கொடியையும் ஒத்த குறவர்குல நங்கையாகிய வள்ளியம்மையாரைச் சேர்ந்த குணக்குன்று போன்றவரே!

English Lyrics

adiyaik kuRiyAdhu aRiyAmaiyinAn
midiyak kedavO muRaiyO muRaiyO
vadi vikrama vElmagibA kuRamin
kodiyaip puNarum guNa bUdharanE!

English Meaning

Should I entirely perish without meditating upon Your Sacred Feet because of (my) ignorance? Is it right? O, Supreme King (of the world), who holds the weapon of lance possessing sharpness and prowess, and who is united with the creeper-like hunter-maiden Valli-ammaiyaar!

· WhatsApp
Books

Kandhar Anubhudhi

by Dr. Singaravelu Sachithanantham

46%
Reading Progress
Local First