Books
Arunagirichelvar

Kandhar Anubhudhi

Song 24 - kUrvEl vizhi (கூர்வேல் விழி)

~ 1 min read

Tamil Lyrics

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ!!
சூர்வே ரொடு குன்று தொளைத்த,நெடும்
போர்வேல! புரந்தர பூபதியே!

Tamil Lyrics (Split)

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணும் அதோ!!
சூர் வேரொடு குன்று தொளைத்த, நெடும்
போர்வேல! புரந்தர பூபதியே!

Tamil Meaning

கூரிய வேல் போன்ற கண்களையுடைய மாதர்களின் கொங்கையிலே சேரும் விருப்பத்தை உடைய அடியேனின் மனம் தேவரீரின் திருவருள் கிடைக்கவேண்டும் என்று எண்ணும் நற்பேற்றினைப் பெறுமோ? மாமரமாகவும், கிரவுஞ்ச மலையாகவும் உருவெடுத்திருந்த அசுரன் சூரபன்மனை அழிப்பதற்கென்று, அவற்றை வேரொடு தொளைத்து, அழித்த பெரும் போர் செய்யவல்ல ,வேலாயுத்தை ஏந்தியவாறு உலகத்தைக் காக்கும் கடவுளே!

English Lyrics

kUrvEl vizhi mangkaiyar kongkaiyilE
sErvEn aruL sEravum eNNum adhO
sUr vErodu kundRu thoLaiththa nedum
pOrvEl purandhara bUbadhiyE!

English Meaning

Will my mind being inclined to hug the breasts of women, who have eyes as sharp as the lance, have the good fortune of thinking of obtaining Your Sacred Grace? O, The Supreme Ruler of the world, You have the long and great warring lance, which pierced through to the roots and destroyed the mango-tree and the kaunca-hill, into which the demon Soorapanman had transformed himself!

· WhatsApp
Books

Kandhar Anubhudhi

by Dr. Singaravelu Sachithanantham

48%
Reading Progress
Local First