Tamil Lyrics
காளைக் கும ரேச னெனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா!
பாளைக் குழல் வள்ளி பதம்பணியும்
வேளைச் சுர பூபதி மேருவையே!
Tamil Lyrics (Split)
காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே!
Tamil Meaning
காளைப் பருவத்துக் குமாரமூர்த்தி என்று தியானித்து தேவரீரின் திருவடிகளைப் பணிபும்படியான தவப்பேற்றை அடியேன் அடைந்தது வியப்பானதொன்றே! தென்னம் பாளையைப் போன்ற நீண்ட கூந்தலை உடைய வள்ளியம்மையாரின் திருப்பாதங்களைப் போற்றும் தேவரீர், விண்ணோர்களுக்குத் தலைவராய், மேருமலை ஒத்த பெருமை உடையவராகத் திகழ்கின்றீர்!
English Lyrics
kALaik kumarEsan enak karudhith
thALaip paNiyath thavam eidhiyavA
pALaik kuzhal vaLLi padham paNiyum
vELach sura pUbadhi mEruvaiyE!
English Meaning
It is really a matter of wonder that I obtained the boon of great penance by contemplating the Sacred Feet of Lord Thirumurugapperumaan, who is the Lord cherishing the Sacred Feet of Valli-ammaiyaar, having long tresses of hair like the flower sheath of the [coconut] palm tree, and He is the Supreme Ruler of the celestials, and is great like the Mahaameru mountain.
