Tamil Lyrics
அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன்
உரிதா உபதேச முணர்த் தியவா!
விரிதாரண! விக்ரம வேளிமையோர்
புரிதாரக! நாக புரந் தரனே!
Tamil Lyrics (Split)
அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா!
விரிதாரண! விக்ரம வேள்! இமையோர்
புரிதாரக! நாக புரந்தரனே!
Tamil Meaning
கிடைத்தற்கு அரிய உண்மைப் பொருளைப் பெறுதற்கு அடியேன் தகுதியுள்ளவனாகக் கருதித் தேவரீர் அடியேனுக்கு உபதேசத்தைப் போதித்தமுறை வியக்கத் தக்கதே! மிகவும் உறுதியானதும் நிலையானதுமான வலிமையுடைய பிரணவப் பொருளாக வானோர் விரும்பித் தியானிக்கும் செவ்வேளே! வானோர் உலகைத் தாங்குபவரே!
English Lyrics
aridhAgiya meip poruLukku adiyEn
uridhA ubadhEsam uNarththiyavA
viridhAraNa vikrama vEL imaiyOr
purithAraga nAga purandharanE!
English Meaning
O, Lord, [It is, indeed, a matter of wonder that] You have graciously considered me as a suitable person to receive the Real Truth, which is difficult to obtain, and have graciously imparted Your teaching to me! O, Lord! You are the Supreme Pranava Being, possessing the very strong and eternal divine valour, being willingly contemplated by the celestials! You are the upholder of the celestial world!
