Tamil Lyrics
கிரிவாய் விடுவிக் ரமவே லிறையோன்
பரிவா ரமெனும் பதமே வலையே
புரிவாய் மனனே! பொறையா மறிவால்
அரிவா யடியோ டுமகந் தையையே!
Tamil Lyrics (Split)
கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
”பரிவாரம்” எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே! பொறையாம் அறிவால்
அரிவாய், அடியோடும் அகந்தையையே!
Tamil Meaning
மனமே! [அசுரன் சூரபன்மன் ஒளிந்திருந்த] கிரவுஞ்ச மலைமீது செலுத்திய ஆற்றல்மிக்க வேலாயுதத்தை ஏந்திய திருமுருகக் கடவுளைப் போற்றும் அடியார்களின் குழுவைச் சேர்ந்தவன் என்னும் பதவியைப் பெறுவதையே நீ விரும்புவாயாக! 'யான்' என்னும் ஆணவத்தை பொறுமையாகிய அறிவைக்கொண்டு அடியோடு [வேருடன்] அரிந்து தள்ளிவிடுவாயாக!
English Lyrics
girivAi vidu vikrama vEl iRaiyOn
parivAram enum padham mEvalaiyE
purivAi mananE poRaiyAm aRivAl
arivAi adiyOdum agandhaiyaiyE!
English Meaning
O, mind! You'd better wish to attain only the position of belonging to the group of devotees, who adore Thirumurugapperumaan, who holds the powerful lance, which the Lord hurled at the Kraunca-hill [wherein the demon Soorapanman had hidden]! You'd better also cut off and cast away the self-oriented egoism completely [with its roots] by means of wisdom of patience!
