Tamil Lyrics
“நாதா! குமரா! நம!” என் றரனார்
ஓதா யென வோதியதெப் பொருள்தான்?
வேதா முதல் விண்ணவர் சூடு மலர்ப்
பாதா குறமின் பதசே கரனே!
Tamil Lyrics (Split)
“நாதா! குமரா! நம”என்று அரனார்
ஓதாய், என ஓதியது எப்பொருள் தான்?
வேதா முதல் விண்ணவர் சூடு(ம்)மலர்ப்
பாதா! குறமின் பதசேகரனே!
Tamil Meaning
பிரமன் முதலாய விண்ணோர் தங்கள் தலையுச்சிமேல் அணியும் செந்தாமரை மலர்களையொக்கும் திருவடிகளை உடையவரே! வள்ளியம்மையாரின் திருவடிகளைத் தேவரீரின் முடிமீது கொள்பவரே! சிவபெருமான், 'நாதரே, குமராய நம' என்று வணங்கி [பிரணவ மந்திரத்தின் பொருளைத் தமக்கு] உபதேசிப்பீராக என்று கேட்கத் தேவரீர் உபதேசித்தருளிய பொருள்தான் யாதோ?
English Lyrics
nAdhA kumarA nama endRu aranAr
OdhAi ena Odhiyadhu epporUl thAn?
vEdhA mudhal viNNavar sUdumalarp
pAdhA kuRamin pAdhasEgaranE!
English Meaning
O, Lord, who has red lotus-flower-like Sacred Feet, which Brahmaa and the other celestials wear on the top of their heads! O, Lord, You have Valli-ammmaiyar's Sacred Feet over Your Head! What is the meaning of the Sacred [pranava] mantra which You graciously expounded to Lord Sivaperumaan, who addressed You as Naathaa, and adored You with the mantra 'Kumaraaya nama'?
