Tamil Lyrics
கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே!
Tamil Lyrics (Split)
'கூகா' என என்கிளை கூடிஅழப்
போகா வகை மெய்பொருள் பேசியவா!
நாகாசல வேலவ! நாலுகவித்
தியாகா! சுரலோக சிகாமணியே!
Tamil Meaning
'கூகா' என கூச்சலிட்டு அடியேனின் சுற்றத்தார் ஒன்றுகூடி அழ அடியேன் இறந்துபோகா வண்ணம், உண்மையான ஞானப்பொருளை எனக்கு உபதேசித்த பரம்பொருளே! 'நாகாசலம்' எனப்படும் திருச்செங்கோட்டுமலைமீது வதியும் வேலாயுதனே! ['ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம்'] என்னும் நான்கு வகையான கவிகளைப் பாடும் திறத்தை தேவரீரின் அடியார்களுக்கு வழங்கியருளும் பெருமாளே! வானுலகத்து சிரோரத்தினமே!
English Lyrics
'kUgA' ena enkiLai kUdi azhap
pOgA vagai meipporuL pEsiyavA
nAgAsala vElava nAlukavith
thiyAgA suralOga sigAmaNiyE!.
English Meaning
O, Lord of the Universe, You have expounded the Real Wisdom to me, so that I shall not die when my relatives scream and cry together [over my impending death]! You are the Lord of the lance abiding on the Thirucengkotu-hill, known as Naagaacala. You are the great Lord who graciously grants the devotees the ability to sing of Your Sacred praise by composing four kinds of [Tamil] verses [known as aacu, mathuram, ciththiram and viththaaram]. You are the Foremost Gem of the celestial world!
