Tamil Lyrics
செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
'சும்மா இருசொல் லற'வென் றலுமே
அம்மா பொருளொன் றுமறிந்திலனே!
Tamil Lyrics (Split)
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான் இறவான்
'சும்மா இருசொல்அற' என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!
Tamil Meaning
செவ்விய மான் ஈன்ற மகளாம் வள்ளி-அம்மையாரைக் களவிற் கொண்டு சென்ற கள்வனாகிய பிறப்பும் இறப்பு இல்லாத திருமுருகப்பெருமான், 'பேசாத மவுன நிலையில் சும்மா இருப்பாயாக!' என்று அடியேனுக்கு உபதேசித்தவுடனே இவ்வுலகப் பொருள் எல்லாம் மறைந்துபோனது வியப்பாகவுள்ளது!
English Lyrics
semmAn magaLaith thirudum thirudan
pemmAn murugan piRavAn iRavAn
'summA irusollaRa' endRalumE
ammA poruL ondRum aRindhilanE!.
English Meaning
As soon as Thirumurugapperumaan, who knows of neither birth nor death, and who secretly took away Valli-ammaiyaar, born of the beautiful deer, imparted the teaching enjoining me to be in quietude without speaking, what a surprise that all the things of this world vanished!
