Books
Arunagirichelvar

Kandhar Anubhudhi

Song 33 - sindhA Agulam (சிந்தா ஆகுலம்)

~ 1 min read

Tamil Lyrics

சிந்தா குலஇல் லொடுசெல் வமெனும்
விந்தா டவியென்று விடப் பெறுவேன்?
மந்தா கினிதந் தவரோ தயனே!
கந்தா! முருகா! கருணா கரனே!

Tamil Lyrics (Split)

சிந்த ஆகுல(ம்) இல்லொடு செல்வம் எனும்
விந்த அடவி என்று விடப்பெறுவேன்?
மந்தாகினி தந்த வரோதயனே!
கந்தா! முருகா !கருணாகரனே!

Tamil Meaning

கங்கை நதி ஈன்ற வரத மூர்த்தியே! கந்தப்பெருமானே! திருமுருகப்பெருமானே! கருணைக்கு இருப்பிடமானவரே! மனத்துக்கு வருத்தம் தரும் இல்லற வாழ்க்கையுடன் செல்வம் என்னும் விந்தியமலைக்காடு போன்ற சிக்கல் நிறைந்த சூழலை அடியேன் என்று விட்டு விலகுவேன்?

English Lyrics

sindhA Agulam illOdu selvam enum
vindhAdavi endRu vidappeRuvEn?
mandhAgini thandha varOdhayanE
kandhA murugA karuNAgaranE!

English Meaning

O, Lord! You were born of the Ganges river! You are the abode of boons and compassion! O, Lord Kanthaa! O, Lord Thirumurugaa! When will I let go of the complex swirl of domestic life, afflicting the mind, and of the wealth, which is like the jungle of Vindhya mountain range?

· WhatsApp
Books

Kandhar Anubhudhi

by Dr. Singaravelu Sachithanantham

65%
Reading Progress
Local First