Books
Arunagirichelvar

Kandhar Anubhudhi

Song 42 - kuRiyaik kuRiyAdhu (குறியைக் குறியாது)

~ 1 min read

Tamil Lyrics

குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியாமையும் அற்றதுவே!

Tamil Lyrics (Split)

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனி வேல் ஐ நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று,
அறிவு அற்று அறியாமையும் அற்றதுவே!

Tamil Meaning

[தியானிக்கப்படும் பொருளை, பசு, பாசம் பற்றிய அறிவைக் கொண்டு தியானிக்காமல், பதிஞானத்தைத் தியானித்து அறிகின்ற வழியைத்] தனிச் சிறப்புமிக்க வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமான் அடியேனுக்கு உபதேசித்தருளியவுடனே, உலகத்தாருடன் கொண்டொழுகும் நெருங்கிய உறவுகள், வாக்கு, மனம், அறிவு ஆகியவற்றோடு அறியாமையும் நீங்கி ஒழிந்தனவே!

English Lyrics

kuRiyaik kuRiyAdhu kuRiththu aRiyum
neRiyaith thani vElai nigazhththidalum
seRivatRu ulagOdu urai sindhaiyum atRu
aRivu atRu aRiyAmaiyum atRadhuvE!

English Meaning

The close relationships, which I have with the world's people, as well as [my] speech, mind, knowledge and ignorance, were all removed and destroyed as soon as Thirumurugapperumaan, who has the unique great lance, graciously expounded to me [the method of meditating upon a thing by meditating upon the God's wisdom instead of meditating upon the knowledge concerning the soul and one's attachment to things and persons]!

· WhatsApp
Books

Kandhar Anubhudhi

by Dr. Singaravelu Sachithanantham

83%
Reading Progress
Local First