Tamil Lyrics
சாகா தெனையே சரணங் களிலே,
காகா, நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா! மயில்வா கனனே!
யோகா! சிவஞா னொபதே சிகனே!
Tamil Lyrics (Split)
சாகாது எனையே சரணங்களிலே
கா,கா, நமனார் கலகம் செயும் நாள்
வாகா! முருகா! மயில் வாகனனே!
யோகா! சிவ ஞான உபதேசிகனே!
Tamil Meaning
வெற்றியைத் தரவல்ல வேலாயுதத்தை உடையவரே! திருமுருகப்பெருமானே! மயில் வாகனனே! யோக மூர்த்தியே! சிவபெருமானுக்கு ஞானோபதேசம் செய்த குருமூர்த்தியே! யமன் அடியேனின் உயிரைக் கலக்கிப் பிடிக்க வரும் அந்நாளில் அடியேன் இறவாது தேவரீரின் திருவடிகளை அடியேன் சேருமாறு காப்பாற்றியருள்வீராக!
English Lyrics
sAgAdhu enaiyE saraNangkaLilE
kAgA namanAr kalagam seyum nAL
vAgA murugA mayil vAganaNE
yOgA siva njAna ubadhEsiganE!
English Meaning
O, Lord Thirumurugapperumaan! You have the lance, capable of bringing victory! You have the peacock as the vehicle! You are God of Yoga! You are the Lord-Preceptor, who expounded the wisdom [concerning the pranava-mantra] to Lord Sivaperumaan! Please protect me by enabling me to reach Your Sacred Feet without dying on the day when Yaman (death) comes along to capture my life!
