Tamil Lyrics
தூசா மணியுந் துகிலும் புனைவாள்
நேசா! முருகா! நினதன் பருளால்
ஆசா நிகளந் துகளா யினபின்,
பேசா அநுபூதி பிறந்ததுவே!
Tamil Lyrics (Split)
தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா! முருகா! நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்,
பேசா அநுபூதி பிறந்ததுவே!
Tamil Meaning
[ஆடை அலங்காரமாக] முத்து, மரகதம் ஆகிய மணி வகைகளையும் ஆடையையும் அணியப்பெற்றவரும் வேடர் குலத்தவருமான வள்ளியம்மையாரின் அன்பரே! திருமுருகப்பெருமானே! தேவரீரின் அன்பும் அருளும் அடியேனுக்குக் கிடைத்த நற்பேற்றால், அடியேனின் ஆசை என்னும் விலங்கு, பொடியாகிய பின்னர் மவுனம் என்னும் அனுபவ ஞானம் பிறந்ததுவே!
English Lyrics
thUsA maNiyum thugilum puNaivAL
nEsA murugA ninadhu anbu aruLal
AsA nigaLam thugaLayina pin
pEsA anubUdhi piRandhadhuvE!
English Meaning
O, Lord Thirumurugapperumaan! You are the loving companion of Valli-ammaiyaar, who is of the hunters' clan, and who is adorned with garments and ornaments of precious gems including pearl and emerald! After the fetters of my desire became smithereens by virtue of Your loving and gracious blessings, the practical wisdom of quietude came into being!
