Tamil Lyrics
மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவே டணையென் றுமுடிந் திடுமோ?
கோவே! குறமின் கொடிதோள் புணருந்
தேவே! சிவசங் கரதே சிகனே!
Tamil Lyrics (Split)
மாஏழ் சனனம் கெட, மாயை விடா,
மூஏடணை என்று முடிந்திடுமோ?
கோவே! குறமின் கொடிதோள் புணரும்
தேவே! சிவசங்கர தேசிகனே!
Tamil Meaning
உலகை ஆளும் மாமன்னரே! வேடர் குலத்தவரும் மின்னற்கொடி போன்றவருமான வள்ளியம்மையாரின் தோள்களைச் சேரும் கடவுளே! சிவபெருமானுக்குக் குருமூர்த்தியானவரே! பெரிய ஏழுவகையான பிறப்பு நீங்குமாறு மயக்கம் நீங்காத [மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை எனப்படும்] மூன்று வகை ஆசைகளும் எப்போதுதான் முடிவுறுமோ?
English Lyrics
mA Ezh sananam keda mAyai vidA
mU EdaNai endRu mudindhidumO
kOvE kuRamin kodiththOL puNarum
dhEvE sivasangkara dhEsiganE!
English Meaning
O, Lord Thirumurugapperumaan! You are the Great King ruling the world! O, God! You are united with the shoulders of Valli-ammaiyaar, who is of hunters' clan, and is like the tender lightning-like creeper! You are the Lord, who was the Preceptor to Lord Sivaperumaan! When will the three kinds of never ending delusionary desires [for earth, woman, and gold] come to an end, so that the huge cycle of sevenfold-birth will be removed?
