Books
Arunagirichelvar

Kandhar Anubhudhi

Song 40 - vinai Oda (வினை ஓட)

~ 1 min read

Tamil Lyrics

வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்,
மனையோடு தியங்கி மயங் கிடவோ?
சுனையோ டருவித் துறையோடு பசுந்
திணையோ டிதணோடு திரிந்தவனே!

Tamil Lyrics (Split)

வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்,
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு, அருவித் துறையோடு, பசும்
திணையோடு, இதணோடு திரிந்தவனே!

Tamil Meaning

சுனைகள், அருவித் துறைகள், பசிய தினைப்புனம் ஆகியவற்றினிடையே [வள்ளியம்மையாரைக் காணும் பொருட்டுத்] திரிந்தவரே! வினையை வெருட்டி, ஓட்டும் ,ஒளிபொருந்திய தேவரீரின் வேலாயுதத்தை அடியேன் மறவேன்! அத்தகைய அடியேன் இல்லற வாழ்வில் அகப்பட்டுக் கலங்கி அறிவை இழந்து மயக்கம் அடையலாகுமோ?

English Lyrics

vinai Oda vidum kadhirvEl maRavEn
manaiyOdu thiyangki mayangkidavO
sunaiyOdu aruvith thuNaiyOdu pasum
thiNaiyOdu idhanOdu thirindhavanE!

English Meaning

O, Lord Thirumurugapperumaan! You wandered in the midst of streams, waterfalls, and greenish millet fields [in order to find Valli-ammaiyaar]! I shall not forget Your lustrous lance, which drives away the result of past deeds! Should a devotee like me be bereft of wisdom, bewildered, and stupefied after being caught in married life?

· WhatsApp
Books

Kandhar Anubhudhi

by Dr. Singaravelu Sachithanantham

79%
Reading Progress
Local First