Books
Arunagirichelvar

Kandhar Anubhudhi

Song 13 - murugan thanivEl (முருகன் தனிவேல்)

~ 1 min read

Tamil Lyrics

முருகன் தனிவேல் முனிநம் குருவென்
றருள்கொண் டறியார் அறியுந் தரமோ?
உருவன் றருவன் றுளதன் றிலதன்
திருளன் றொளியன் றெனநின் றதுவே!

Tamil Lyrics (Split)

“முருகன், தனிவேல் முனி ,நம்குரு”என்று
அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ!
உரு அன்று ,அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள்அன்று, ஒளி அன்று, என நின்றதுவே!

Tamil Meaning

ஒப்பற்ற வேலாயுதத்தை ஏந்திய திருமுருகப்பெருமான் நமது குரு என்று, அப்பெருமானின் திருவருளால் அறியாதவர் அப்பெருமானின் திருவருளை அறியும் தன்மையுடையவரோ? மெய்ப்பொருளாகிய திருமுருகப்பெருமான், உருவமுடையவரும் அல்லர்; உருவமற்றவரும் அல்லர்; உள்ளதோர் பொருளும் அல்லர்; இல்லாத பொருளும் அல்லர்; இருள் சூழ்ந்த பொருளும் அல்லர்; ஒளி பொருந்திய பொருளும் அல்லர்!

English Lyrics

murugan thanivEl muninam guru endRu
aruLkoNdu aRiyAr aRiyum tharamO
uruvandRu aruvandRu uLadhandRu iladhandRu
iruLandRu oLiyandRu ena nindRadhuvE!

English Meaning

Does one, who does not know by virtue of the Lord's Sacred Grace that the lance-bearing Lord Thirumurugapperumaan is our Supreme Teacher, have the ability to know of the Lord's Sacred Grace? Lord Thirumurugapperumaan, who is the Supreme Being is neither one of form, nor formlessness, nor an entity, which exists, nor an entity, which does not exist, nor a thing surrounded by darkness, nor a thing full of effulgence!

· WhatsApp
Books

Kandhar Anubhudhi

by Dr. Singaravelu Sachithanantham

27%
Reading Progress
Local First