Tamil Lyrics
விதிகா ணுமுடம் பைவிடா வினையேன்
கதிகா ணமலர்க் கழலென் றருள்வாய்?
மதிவா ணுதல்வள் ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே!
Tamil Lyrics (Split)
விதிகாணும் உடம்பை விடா வினையேன்,
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்?
மதிவா( ள்)நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா! சுர பூபதியே!
Tamil Meaning
பிறை போன்ற ஒளிவீசும் நெற்றியை உடைய வள்ளியம்மையாரைத் தவிர வேறு யாரையும் துதிக்காத விரதம் பூண்டவரே! விண்ணோர்களின் மாமன்னரே! பிரமன் படைத்ததும் வினையாலானதுமான உடலைப் புறக்கணித்துவிட்டு அடியேன் நற்கதியை அடையும்படி செந்தாமரை மலர்களையொக்கும் தேவரீரின் வீரக்கழல்கள் அணியப்பெற்ற திருவடிகளை அடியேனுக்கு எப்போது அருள்வீர்?
English Lyrics
vidhikANum udambai vidA vinaiyEn
kadhikANa malarkkazhal endRu aruLvAi?
madhivANudhal vaLLiyai alladhu pin
thudhiyA viradhA sura bUbadhiyE!
English Meaning
O, Lord, You have vowed not to adore anyone else except Valli-ammaiyaar, whose forehead is like the bright crescent moon! O, the Supreme King of the celestials! When will You graciously grant me Your red lotus-like and heroic anklets-worn Sacred Feet, so that I may attain mukthi [liberation] by forsaking the deeds-ridden body created by Brahmaa?
