Tamil Lyrics
சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ?
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்,வெங்
காடும், புனமுங், கமழுங் கழலே!
Tamil Lyrics (Split)
சாடும் தனிவேல் முருகன் சரணம்,
சூடும்படி தந்தது சொல்லுமதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெங்-
காடும், புனமும், கமழும் கழலே!
Tamil Meaning
பகைவர்களைத் தொளைத்து அழிக்கும் ஒப்பற்ற வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமானே! வீடுபேற்றின் நிலையிலும், விண்ணோர்களின் தலைமீதும் நான்கு வேதங்களிலும் கொடிய காட்டிடையேயும் தினைப்புனத்திலும் விளங்கும் வீரக்கழல்கள் அணியப்பெற்றத் தேவரீரின் திருவடிகளை அடியேன் சிரசின்மீது அடைக்கலமாகச் சூட்டிக் கொள்ளுமாறு தேவரீர் தந்தருளிய கருணையை அடியேன் எடுத்துச் சொல்லக்கூடுமோ?
English Lyrics
sAdum thanivEl murugan saraNam
sUdumbadi thandhadhu sollumadhO
veedum surar mAmudi vEdhamum veng-
kAdum punamum kamazhum kazhalE!
English Meaning
O, Lord Thirumurugapperumaaan! You have the unique weapon of lance, which pierces through the enemies and destroys them! Will I ever be able to say how great is the blessings of compassion, which You have graciously granted me, so that I could wear over my head Your heroic anklets-adorned Sacred Feet, which are prominent in the abode of mukthi (liberation), as well as over the celestials' heads, the four Vedas, the cruel jungle, and the millet field?
