Tamil Lyrics
சிங்கார மடந்தையர் தீநெறிபோய்
மங்காம லெனக்கு வரந் தருவாய்!
சங்க்ராம சிகாவல! சண் முகனே!
கங்கா நதிபால க்ரு பாகரனே!
Tamil Lyrics (Split)
சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்!
சங்க்ராம சிகாவல! சண்முகனே!
கங்கா நதி பால! க்ருபாகரனே!
Tamil Meaning
போரில் வல்ல மயில் வாகனத்தையுடையவரே! சண்முக மூர்த்தியே! கங்கை நதியின் பால குமாரனே! கிருபாகர மூர்த்தியே! அழகிய மாதர்கள் நிமித்தம் தீய வழியில் சென்று அடியேன் மனம் குலைந்து போகா வண்ணம் அடியேனுக்கு வரந்தந்து அருள்வாயாக!
English Lyrics
singAra madandhaiyar theeneRi pOi
mangkAmal enakku varam tharuvAi!
sangkrAma sigAvala saNmuganE!
gangA nadhi bAla krubAgaranE!
English Meaning
O, Lord, who has the invincible peacock as the vehicle! You are the God of six Sacred Faces! You are the infant of the Ganges river! You are the abode of compassion! Please grant me the boon, so that my mind will not be bewildered by following the evil path because of pretty women!
